உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

விளம்பர உத்தி

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

வணிகத் துறையிற் போன்றே மொழித் துறையிலும், ஒரு மொழி விளம்பரத்தினால் உயர்வதும் இன்னொருமொழி அஃதின்மையால் தாழ்வதும் நேர்கின்றன. தம்பொருளை விளம்பரஞ் செய்வார் பிறர்பொருள் விளம்பரத்தைப் பலதீய வழிகளில் தடுப்பதும், எல்லாத் துறையிலும் வழக்கமாயிருந்து வருகின்றது. வ.மொ.நூ.வ.முக.3 போலித்தமிழ்ப்பற்று

அயன்மொழிப் பெயரை மாற்றாது தமிழ்ப் பற்றுக் காட்டுவதெல்லாம், பெற்றோர்க்கு ஓரளவு உதவினும் அவரைப் பிறரிடத்து மற்றோராகக் காட்டி மறைப்பதும் போன்றதே.

இருவகைப் பகைவர்

Qls. Lon. 7:1:12

தெ. ம

தமிழைக் கெடுக்கும் தமிழ்ப் புலவர், வாள்போற் பகைவரும்; கேள்போற் பகைவரும் ஆக இரு சாரார். த.வ.300 வாளும் கேளும்

தமிழின் தூய்மையைக் குலைப்பவர் எல்லாம் வாள் போற் பகைவரும் கேள்போற் பகைவருமே. முதன்மொழி 1.3:6

எலும்புத் துண்டு

(தமிழ் நலத்தைக் கருதாது தம் நலம் ஒன்றையே தன்மை கருதிச் சொற்பொழிவாற்றும் புலவர்) தனக்கு ஒரு சூப்பெலும்புத் துண்டு கிடைக்குமாறு தன் தந்தை மரத்தினின்று கீழ் விழுந்து காலொடிவதை விரும்பிய சிறுமியின் தன்மையையே ஒக்கும். வ.மொ.நூ.வ.56

கூற்றும் கூற்றும்

நேர்நின்று காக்கை வெளிது என்பாரும் தாய்க்கொலை சால்புடைத்து என்பாரும் தமிழை ஒழிக்கத் தயங்கார். ஆதலின் அவர் தமிழுக்கு மாறாகக் கூறும் கூற்றையெல்லாம் கூற்றென்றே கொள்ளுதல் வேண்டும். த.க.கொ.த.21

சண்டிக் குதிரையும் பட்டிமாடும்

(மேலையர்) தமிழர்போல் ஒரு சிறந்த இலக்கண நடைமொழியை அளவைப் படுத்திப் பேச்சு வழக்கையும் பலுக்கல் (உச்சரிப்பு) முறையையுங் கட்டுப்படுத்தாது, சண்டிக் குதிரையும் பட்டிமாடும்போல் போன போன போக்கெல்லாந் திரியவிட்டு,