உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

331

கீழோர் வழக்கையும் மேலோர் வழக்கொப்பக் கொண்டு அவற்றை எழுத்து வடிவில் எழுதிக் காட்டவும் வழியின்றி இடர்ப்படுவது எத்துணைப் பண்பாடற்ற செயலாம். வ.மொ.நூ.வ.100

செம்மை வரம்பு

மொழிக்குச் செம்மை வரம்பிடாது வாய்போன போக் கெல்லாம் பேச்சுத்திரியவிடின், அது குதிரைபோல் ஓரிடத்து நில்லாது காடு மேடாய் இழுத்துச் செல்லும்; இறுதியில் குழிக் குள்ளும் தள்ளும். புதுப்புது நடைதோன்றிப் பழநடை வழக்கு வீழும். பண்டை இலக்கியம் பயனற்றுப்போம்.

வ.ச.பவளவிழா மலர். செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு. 4

மொழி நடையும் வாழ்வு நடையும்

எல்லா வகையிலும் மேன்மக்கள் நடையையே கீழ் மக்கள் பின்பற்றல் வேண்டும். கீழ்மக்கள் பேச்சை ஒப்புக்கொள்ள வேண்டும் எனின், கீழ்மக்கள் ஒழுக்கத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அங்ஙனங் கொள்ளின் ஆட்சியும் காவலும் வழக்கும் தீர்ப்பும் குற்றத் தண்டனையும் வேண்டியதே யில்லை.

வ.சு. மவளவிழாமலர், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு4

பயனும் திருத்தமும்

கருத்தறிவிப்புத் தானே மொழியின் பயன்! எந்நடையிற் பேசினாலென்ன? என்பர் சிலர். அது, பசியைப் போக்குவது தானே உணவின் பயன்! எங்ஙனம் பல் துலக்காதும், குளியாதும், அடுகலத்திற்குள் கையிட்டும் உண்டாலென்ன? என்று வினவுவது போன்றிருக்கிறது. ஆறறிவு படைத்த நாகரிகமாந்தன் எவ்வினை செய்தாலும் திருத்திய முறையிலேயே செய்தல் வேண்டும்.

ஊதாரி

பவள விழாமலர், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு 4

தமிழுக்கு இம்மியும் உதவாது பிறமொழி வளர்ச்சிக்கு ஏராளமாய் வாரிக் கொடுக்கும் தமிழ அரசனை அல்லது செல்வனை ஊதாரி எனின் அது மிகப் பொருத்தமே. வேர்ச்.98 கதிரோன் வெளிப்படல்

கார் காலத்தில் மறைக்கப்பட்ட கதிரவன் திடுமென ஒரு நாள் திகழ்ந்து தோன்றுவதுபோல் தமிழும் ஒருநாள் உலகத்திற்கு வெளிப்படும் என்பதற்கு எட்டுணையும் ஐயமின்று.

மதி.தா.முக.3