உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தமிழ்ப்புலவர்

தமிழ்ப்பயிர்

ம்

1916 ஆம் ஆண்டு, மறைமலையடிகளும் அவர்களின் அருமை முதன்மகளார் நீலாம்பிகை யம்மையாரும் வட சொல்லுள்ளிட்ட வேற்றுச் சொற்களைக் களைந்து நல்லுரமிட்டு நன்னீர் பாய்ச்சிக் கண்ணும் கருத்துமாய்ப் பேணி வளர்க்கத் தொடங்கியதினின்று தமிழ்ப் பயிர் தழைத்தோங்கி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றது. அதே சமயத்தில் அகப்பகையும் புறப்பகையுமான பல்வகைத் தமிழ்ப் பகை வரும் வேற்றுச் சொற்களை மீண்டும் மீண்டும் ஊடு ஆயினும் தாம் விதைத்துக்கொண்டும் விலங்கு பறவைகளை ஏவிக்கொண்டும் வரத்தான் செய்கின்றனர். படுதோல்வி யடைந்து அடியோடு அழிந்தொழிந்து போவது அண்ணணித்தே.

மறைமலையடிகள் நடை

ஓதிம (அன்ன) நடையினும் மாதர் நடையினும் உயர்ந்த அழகுள்ளது மறைமலையடிகள் நடையாகிய செந்தமிழ் நடை

வ.சு. பவளவிழாமலர். செந்தமிழ் வலம்பீட்டின் சிறப்பு 3 அமைதிவாரி அன்ன அடிகளார்

உலக மொழிகள் (ஏறத்தாழ) மூவாயிரத்துள், ஒருபோதும் வழங்கா இலக்கியப் பெருமொழி என்னும் வகையிற் சமற் கிருதமும், என்றுமுள்ள உலகமுதல் உயர் தனிச் செம்மொழி யென்னும் வகையில் தமிழும், உலகப் பொதுக் கலவைப் பெருமொழி யென்னும் வகையில் ஆங்கிலமும் தலைசிறந்த மொழிகளாகும். இம் மூன்றும் ஒருங்கே கைவந்தார் பலர் இருந்தாரெனும் அவரனைவருள்ளும் எவரெத்து (Everest) என்னும் வெள்ளிமலை போலுயர்ந்தும், அமேசான் (Amazon) என்னும் அமெரிக்க ஆறுபோல் அகன்றும், அமைதிவாரியின் (Pacific Ocean) தென்னகழி போலாழ்ந்தும் பிறங்கித் தோன்றிய