உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

333

பெரும்புலமை வாய்ந்தவர் மறைமலையடிகளே என்பது

மிகையன்று.

மறைமலையடிகள் நூற்றாண்டு விழாமலர். மறைமலையடிகளின் மும்மொழிப்புலமை. 11

பனிமலை மறைமலை

இருபதாம் நூற்றாண்டில் பனிமலைபோலப் பரந்தும் நீண்டும் உயர்ந்தும் தலைசிறந்து விளங்கிய தமிழ்ப் புலவர் மறைமலையடிகள் ஒருவரே.

தெ.மொ.7,9:12

பெரியாரைப் பேணாமை

"சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.”

மறைமலையடிகள் காலத்தில் அவர்களைத் தமிழர் போற்றாதிருந்ததே இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாம்.

தொல்காப்பியரும் சாமிநாதையரும்

திருக். மர. 976

பாரதக் காலத்திற்குப் பிற்பட்டவரும், ஐந்திரவிலக்கணத்தை நன்கு கற்றவரும் பாணினிக்கு முற்பட்டவருமான தொல்காப்பியர், கி.மு. 7-ஆம் நூற்றாண்டு போல் சேரநாட்டின் தென்கோடியில் வாழ்ந்திருந்து தமிழிலக் கண இலக்கியங்களைக் கற்றபின் பண்டாரகர் உ.வே. சாமிநாதையர் போற் பல செந்தமிழ் முந்து நூல்கண்டு முறையாக ஆய்ந்து தம்பெயரால் தொல்காப்பியம் என ஒரு பிண்ட நூலைத் தொகுத்து நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக் களத்தில் (அக்காலத்தில் கழக மின்மையால்) திருவங் கோட்டில் நான் மறையில் முற்றத் துறைபோயிருந்த ஓர் ஆரியத் தமிழ்ப் புலவர் தலைமையில் அரங்கேற்றினார்.

விறகுத் தலையன் போல் ஏடுசுமத்தல்

த.வ.282

காவிரி வாய்ப்படவும் கறையான் வாய்ப்படவும் இருந்த கடைக்கழக நூல் ஏட்டுச் சுவடிகளை ஊரூராகவும் தெருத் தெருவாகவும் வீடு வீடாகவும் திரிந்து தேடியும் விறகுத் தலையன்போல் தலையிற் சமந்து கொணர்ந்தும் அல்லும் பகலும்