உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

கண்பார்வை கெடக் கூர்ந்து நோக்கிப் படித்தும் அரியஆராய்ச்சிக் குறிப்புக்களும் ஒப்புமைப் பகுதிகளும் வரைந்தும் ஆராய்ச்சி யாளர்களுக்குப் பேருதவியாகவும் பிறர்க்குப் பெரும் பயன்படவும் வெளியிட்டவர் தென்கலைச் செல்வர் பெரும்பேராசிரியர் பண்டாரகர், உ.வே. சாமி நாதையரே.

சூறாவளிபோற் சுழற்றி எறிதல்

த.வ.294

சுப்பிரமணிய சாத்திரியாரின் தொல்காப்பியக் குறிப்பை மறுத்து, சூறாவளி போற் சுழற்றி எறிந்தவர் மன்னார்குடிச் சோமசுந்தரம் பிள்ளையே.

வெம்பாலைத் தண்சோலை

த.வ.295

பொறுப்பு வாய்ந்த உயர்பதவித் தமிழாசிரியரெல்லாம் ஊமையராயும் செவிடராயும் எங்கெழிலென் ஞாயிறெமக்கு என்றிருக்கும் இக்காலத்தில் ஓய்வு பெற்ற அரசியலதிகாரியார் ஒருவர் (கு. கோதண்ட பாணிப் பிள்ளை) வெம்பாலைத் தண் சோலையும் கடும் பஞ்சத் திடிமழையும் போல எதிர் பாராத வகையில் இசைத் தமிழைக் காக்கத் துணிந்தது இறைவன் ஏற்பாடே என்பது என் கருத்து. பழந்தமிழிசை.மதிப்புரை. 26 ஒப்புரவு

வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செண்டத்தூர் ஐயாத்துரை முதலியார் என்னும் வள்ளல், தம் செல்வம் சுருங்கிய காலத்தும் ஓரிலக்கம் உருபா கடன் கொண்டு ஒப்புரவாற்றியது "இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார், கடனறி காட்சி யவர்" என்பதற்கோர் எடுத்துக் காட்டாம். திருக். மர.218

நாளும் கோளும் பார்த்தல்

நாள்கோள்களின் இயக்கத்தால் மழையும் மழையின் மையும் போல நன்மை தீமை விளைவது உண்மையாயினும், அவ்விளைவை அவ் இயக்கத்திற்குக் காரணமான எல்லாம் வல்ல இறைவன் ஏற்பாடாகக் கொள்வதல்லது ஞாலம் போல் உயிரற்ற அஃறிணையிடப்பொருள்களாய நாள்கோள்களின் செயலாகக் கொள்வது எங்ஙனம் பொருந்தும்? தமிழ்நாட்டுக் கீழைக் கரைப் புயற் சேதத்தால் துன்புற்ற மக்கட்குச் சென்னை மாகாண முதலமைச்சர் மதிதகு காமராச நாடார் புகைவண்டி வாயிலாய்