உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

337

அமைந்திருக்கவும் பெயரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில் சமற்கிருதத்தினின்று பிராகிருதம் பிறந்ததென்னும் தலைகீழ் முடிபிற்கு உந்தப்படுவது, தமிழர் வெளிநாட்டினின்று வந்தவர் என்று கொள்ளும் அடிப்படைத் தவற்றினாலேயே.

அரத்தம் - அரங்கன்

வ.வ.47

வடமொழியிலுள்ள சொற்களெல்லாம் வடசொல்லே யென்று இடைக்காலத்தில் ஒரு தவறான கருத்து மக்கள் மனத்தில் வேரூன்றியிருந்ததினால், அரத்தம் என்னும் தென்சொல்லின் வடசொல் வடிவான ரக்த என்பதையே மூலமாகக் கொண்டு அதைத் தமிழ்முறைக் கேற்ப இகரம் முன்னிட்டு இரத்தம் எனச் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர். இது அரங்கன் என்னும் தென்சொல்லை ரங்கன் என்னும் வடசொல் வடிவின் திரிபாகக் கொண்டு இரங்கன் என்று தமிழில் தவறாக எழுதுவ தொத்ததே. வேர்ச். 62

வடக்கும் தெற்கும்

இயல்பிலும் போக்கிலும் வடமொழியும் தென்மொழியும் வடக்கும் தெற்கும் போல் நேர்மாறானவை.

நௌ - நாவாய்.

செ.செ. 31. 178

கடலையும் கப்பலையும் காணாதவரும் நெடுகலும் நிலவழியாய் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தவருமாகிய ஆரியர், நௌ என்னும் (படகைக் குறிக்கும்) வடசொல்லினின்று நாவாய்ச் சொல்வந்த தென்பது, வாழைப் பழத் தோலியை நட்டால் வாழை முளைக்கும் என்பது போன்றதே.

வீணையும் யாழும்

QS. ALDIT: 4. 3: 16

வீணை என்னும் பெயர் வேறுபாட்டானேயே யாழ்வேறென்று கொள்வது விருத்தாசலத்தின் வேறு பழமலை (முதுகுன்றம்) என்று கொள்வதேயாம்.

குரல் சட்சமே, மத்திமமன்று செ. செ. 20.466