உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

மகன் தந்தையைப் பெற்றான்

இலக்கணம் என்னும் சொல்லே வடமொழியில் லக்ஷிண என்று திரியும். இதற்கு மாறாக மகன் தந்தையைப் பெற்றான் என்பது போல லக்ஷணம் வடசொல்லே தமிழில் இலக்கணம் எனத் திரிந்தது என்று பல்கலைக்கழக அகராதியிற் குறித்திருப்பதும், இவ்வுலகிலேயே இலக்கணவரம்பும் வளர்ச்சியும் மிக்குப் பிறமொழிகட்கெல்லாமில்லாத பொருளிலக்கணம் பெற்றதென்று பாராட்டப்படும் தமிழுக்கு இலக்கணத்தைக் குறிக்க ஒரு சொல்லுமில்லையென்று தமிழ்ப் பகைவரான அயலார் கூறுவதை, ஆராய்ச்சியும் உரிமையுமிக்க இவ்விருபதாம் நூற்றாண்டிலும் தமிழ்ப் புலவர் நம்பிக்கொண்டு அடங்கி யிருப்பதும் விந்தையிலும் விந்தையே. சு.வி.32

பேரனே பாட்டனுக்கு முன்னவன்

பேரனே பாட்டனுக்கு முன் பிறந்தான் என்பது. போன்று, வடமொழியினின்றே தமிழுக்கு ஐகார ஔகாரங்கள் வந்தன என்று சொல்வதனாலும், அதுகண்டு மாணவர் பலர் மயங்கு வதனாலும் அம்மயக்கறுக்கவே இதனை எழுதத் துணிந்தேன். 'ஐ ஒள அய் அவ் தானா? செ. செ. 53; 273

காரிருளிற் காட்டு வழிக் காட்சி

முதலில் முதனிலையே இருதிணை ஐம்பால் மூவிடங் களுக்கும் உரிய எல்லா வினை வடிவிற்கும் பொதுவாயிருந்தது; பின்பு, பாலீறும் காலவிடைநிலையும் எச்சமுற்று வேறுபாடும் முறையே தோன்றின. இவ்வுண்மையெல்லாம் தமிழ்போன்ற இயன்மொழி வாயிலாகவே அறிய முடியும். சமற்கிருதம் போன்ற திரிமொழியையும் செயற்கை மொழியையும் அடிப்படையாய் வைத்தாராயின், ஐரோப்பியராயினும் அமெரிக்கராயினும் காரிருளிற் காட்டு வழிச்செல்வார் போல் ஒன்றுங் கண்டறியார்.

பேரன் பாட்டனைப் பெற்றவன்

த.வ.60

உலகப் பெருமொழிகளில் வடமொழி, திரிபு முதிர்ந்த தாதலின், அதனைக் கொண்டு மொழியின் இயல்பான தோற்றத்தை அறிய விரும்புவார், பேரன் பாட்டனைப் பெற்றவன் என்று கொள்ளுபவரே யாவர்.

Fr. 09. 2