உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

நெய்யும் தொன்னையும்

339

நெய்யே தொன்னைக் காதாரம் என்பது போலத் திரிபிற் சிறந்த வடமொழியை இயன் மொழியாகக் கொள்வாரே வாக்கியத்தை மொழியலகாகக் கொண்டு இடர்ப்படுவர்.

வாகுகன் நளன்

சு.வி.6

எத்தனையோ தென்சொற்கள் வடமொழிச் சென்று வாகுகராய் வழங்குகின்றன. அவைநளராங் காலமும் நண்ணும். வட மொழிச் சென்ற தென்சொற்கள். செ. செ. 9.308

அஃறிணை உயர்திணை

அஃறிணை போலிருந்த தமிழனைப் படிக்க வைத்துத் தன்மான மூட்டி மீண்டும் மீண்டும்

ஆங்கிலேயனே.

உயர்திணைப்

உயர்திணைப்

படுத்தியவன்

த.வ.338

ஆங்கிலத்தின் சிறப்பு

ஆங்கிலம் தானே இங்கு வந்திராவிடின், இந்தியர் மேனாடு சென்று வருந்தித் தேடி அதைக் கண்டுபிடிக்கும் நிலைமை நேர்ந்திருக்கும். அதுதானே இங்கு வந்ததனால் வலிய வந்தாற் கிழவி என்பதுபோல் அதன் அருமை பெருமை அறியப் படாதுள்ளது. இற்றை அறிவியற்கெல்லாம் அடிப்படையான நீராவி வலிமையும் மின்னாக்கமும் கண்டுபிடிக்கப்பட்ட நாட்டு மொழியாகிய ஆங்கிலம் இந்தியர்க்குக் கிடைத்தது இறைவன் பேரருள் என்றும் ஆங்கிலர் வண்கொடையென்றும் வலிய வந்த வானமுதம் என்றும் போற்றத் தக்கதாம். ம.வி.164

ஊமையன் கனா

ஒருவர் இன்று திருவள்ளுவரும் கம்பரும் போல் பெரும் புலவராயிருப்பினும் ஆங்கிலப் பட்டமின்றிக் கல்லூரிக்குட் கால்வைக்க முடியாது. ஒருவர் எத்துணை ஆழ்ந்து பரந்தாராய்ந்து அரியவுண்மைகளைக் கண்டிருப்பினும் ஆங்கில அறிவின்றேல்

ஊமையன் கண்டகனாவே.

ம.விஇ. 177