உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

மருத்துவரும் உடல்நலமும்

ஓர் உணவுப் பொருள் உடல் நலக்கேடான தென்று ஒரு நாட்டுத் தலைமை மருத்துவர் கூறின், அதற்கு மாறாக அப் பொருளை விற்குங் கடைக்காரன் அல்லது அவனுடைய வேலைக்காரன் சொல்லுவது செல்லுமோ? இந்தியால் தமிழ் கெடும் என்றறிந்தே இந்தி பொது மொழியா? என்னும் சுவடியை வெளியிட்டார் தவத்திரு மறைமலையடிகள். பெற்றவருக்குத் தான் தெரியும் பிள்ளையின் அருமை; கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை. பற்றும் புலமையும் அற்ற மற்றவர்க்குத் தெரியுமா நற்மிழ்ப் பெருமை. இ.த.எ.கெ.43

பித்துக் கொண்ட பெற்றோர்

இக்கால வாழ்விற்கு இன்றியமையாத ஆங்கிலத்தைக் கல்லாது இந்தியார்தாமே தம் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ள விரும்பின், அதைத் தடுக்கத் தமிழர் ஏன் இந்திக் கல்வித் தண்டனை அடைய வேண்டும்? செல்லப் பிள்ளை முரண்டுகொண்டு சோறுண்ணாவிடின், பித்துக் கொண்ட பெற்றோர் அதைச் சோறுண்ண வைக்கும்படி அது கேட்டதை யெல்லாம் கொடுப்பர். சொன்னபடி யெல்லாம் செய்வர். ஆயின் பிறர் அங்ஙனம் செய்வரோ? இ.த.எ. கெ 44

தெற்கும் வடக்கும்

இந்தியார் இந்தியை ஒரே இந்திய ஆட்சிமொழியும் இணைப்பு மொழியுமாக்க வேண்டும் என்பதை எவ்வகையிலும் மாற்றொணாக் கொள்கையாகக்கொண்டிருக்கும் போது வடக்கும் தெற்கும் போல் நேர்மாறாக வேறுபட்டிருக்கும். இருசாராரையும் எங்ஙனம் ஒப்புர வாக்க இயலும்? நிலவரைப்பு ஒன்றாயிருந்தால் மட்டும் போதுமோ? தவளை தண்ணீர்க்கும் எலிதிட்டைக்கும் இழுக்கும் போது இரண்டையும் இணைக்கும் கயிற்றால் என்னபயன்? வண்டியிற் பூட்டிய இருகாளைகளுள் ஒன்று வடக்கும் ஒன்று தெற்குமாக இழுக்கும்போது இரண்டையும் இணைக்கும் நகக் கோலால் என்ன பயன்? இ.த.எ.கெ.45