உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

புகைவண்டியும் கட்டை வண்டியும்

341

வடவர் ஆங்கிலம் கற்பதால் தென்னவர் இந்தி கற்க வேண்டும் என்று புதிதாக உத்திக்குச் சிறிதும் பொருந்தா வகையில் தருக்கிவருகின்றனர். இது இந்தியா அமெரிக்கா ஒன்றிய நாடுகளை (U.S.A) நோக்கி, நான் உங்கள் புகைவண்டிச் சூழ்ச்சியங்களை (Engines) விலைக்கு வாங்குவதால், நீங்கள் என் கட்டை வண்டிகளை வாங்கித்தான் ஆக வேண்டும் என்று சொல்வது போன்றன்றோ இருக்கின்றது. இ.த.எ.கெ.48

தூக்குத் தண்டனை

நேரு உறுதிமொழி, இந்தித் திணிப்புபிந்தி நிகழும் என்பதேயன்றி நீக்கப்படும் என்பதன்று. இது மும்மொழித் திட்டத்தை மேற்கொண்ட திராவிட நாடுகட்கே ஏற்கும். இருமொழித் திட்டத்தைக் கொண்ட தமிழ் நாட்டிற்கு ஏற்கவே ஏற்காது.ஆதலால் அது தனித்தே உடனடியாக முழுவலிமையுடன் இந்தித் தொடர்பை எதிர்த் தொழித்தல் வேண்டும்.

தூக்குத் தண்டனையை நீக்க வேண்டும் என்று சொன்னவனுக்கு ஒரு கிழமை பொறுத்துத் தூக்குவோம் என்பது நன்மை பயக்கும் விடையன்று த.இ.வ.309

சாவு வரும் நாள்

இந்தி வெறியர் இந்தியை உடனே அரசியல் மொழியாக்க வேண்டும் என்கின்றனர். தமிழ் நாட்டுப்பேராயம் சற்றுப் பிந்தியாக்க வேண்டும் என்கின்றது. தி.மு.க. மிகப் பிந்தியாக்க வேண்டும் என்றது. இது ஒருவனுக்குச் சாவு இன்றே வரட்டும் என்று ஒரு சாராரும், நாளை வரட்டும் என்று ஒரு சாராரும், நாளை நின்று வரட்டும் என்று ஒரு சாராரும் கூறுவதொத்ததே.

இ.த. எ.கெ.37

நஞ்சொடு கலந்த பால்

மாயினும் இந்தியொடு கலந்தது, நஞ்சொடு கலந்த பாலே.

பொருளாட்சித் துறையில் எத்துணை

தமிழ்நாட்டுப் பேராயத் தலைவரின் தன்னலக் குறும்பு பாவை.

முன்னேற்ற