உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வரலாறு

தெற்கினின்று வரலாறு தொடங்குதல்

ஒருவரது வரலாற்றை அவர் உண்மையாகப் பிறந்த காலத்தினின்றும் இடத்தினின்றுமே தொடங்கல் வேண்டும். அஃதன்றி வேறொரு காலத்திலும் வேறொரு நாட்டிலும் பிறந்த வராகக் கொள்ளின் அவ் வரலாறு உண்மையானதாயிருக்க முடியாது.தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிப் போன குமரிநாடே. ஆதலால், குமரி நாட்டை, அடிப் படையாகக் கொண்டே, தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறுகளை வரைதல் வேண்டும். தமிழர் வரலாறு 18

பேரன் பாட்டன்

மகன் தந்தைக்கும், பேரன் பாட்டனுக்கும் முந்தியவர் என்பதுபோல் தலை கீழாகத் தமிழ் வரலாறும் தமிழ்நாட்டு வரலாறும் இருந்து வருகின்றன.

அடிமணை

த.ச.பொ.வி. மலர் ஒப்பியல் இலக்கணம் 170

எல்லாக் கலைகட்கும் அறிவியல்கட்கும் வரலாறு அடி மணையும் முதுகந்தண்டுமாதலால் வரலாற்றை நீக்கி வரையப் பட்ட எந்நூலும் எவர் இயற்றியதேனும் அறிவியன் முறைப்பட்ட வ.மொ.நூ.வ.முக. 3

தாகாது.

வரலாற்று மொழி நூல்

ஒரு குடும்பத்தாருள், இன்னார் தந்தையார்; இன்னார் தாயார்; இன்னார் புதல்வர்; இன்னார் புதல்வியார்; இன்னார் தமையனார்; இன்னார் தம்பிமார்; இன்னார் தமக்கையார்; ன்னார் தங்கைமார் என்றிங்ஙனங் கூறுவது போன்றது வரலாற்று மொழிநூல். (Historical Linguistics)

வ.மொ.நூ.வ.90