உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

ஒப்பியன் மொழி நூல்

ஒரு குடும்பத்தார் எல்லாரையும் ஒப்பு நோக்கி, இக் குடும்பத்தில்,அத்தனையர் ஆடவர்; இத்தனையர் பெண்டிர்; இத்தனையர் சிவப்பர்; இத்தனையர் கருப்பர்; இத்தனையர் நெடியர்; இத்தனையர் குறியர்; இத்தனையர் ஒத்தவர்; இத்தனையர் வேறுபட்டவர் என்றுரைப்பது போன்றது ஒப்பியன் மொழிநூல் (Comparative Linguistics). வ.பொ.நூ.வ.90

வண்ணனை மொழியியல்

ஒரு குடும்பத்திலுள்ள மக்களுள் ஒவ்வொருவரையும் பற்றி இவர் இன்ன பாலினர்; இன்ன நிறத்தர்; இன்ன வளர்த்தியர்; இன்ன தோற்றத்தர்; இன்ன இயல்பினர்; இன்ன திறமையர் என்று கூறுவது போன்றது வண்ணனை மொழியியல் (Descriptive Linguis- tic வா.மொ.நூ.வ.89)

ஆவணம்

ஒரு வீட்டிற்கு ஆவணம் போன்றே ஒரு நாட்டிற்கு வரலாறு உரிமைச் சான்றாகும். ஆயின், ஓர் ஆவணத்தில் எதிரிகளால் ஏதேனும் கரவடமாகச் சேர்க்கப் படலாம். அதுபோன்றே, ஒரு நாட்டு வரலாறும் பகைவரால் அவர்க்கேற்றவாறு மாற்றப் படலாம். ஆதலால், இவ்விரு வகையிலும் உரிமையாளர் விழிப்பாயிருந்து தம் உரிமையைப் போற்றிக் காத்துக் கொள்ளல் வேண்டும்.

ஆவணம்

தமிழனின் பிறந்தகம் செ.செ. 55: 256

வீட்டிற்கு ஆவணம் போன்றதே நாட்டிற்கு எழுதப்பட்ட வரலாறு; அவ் வரலாறும் உண்மையானதாய் இருத்தல் வேண்டும். தமிழர் வ.முக. 2

ஆவணம்

ஒரு நாட்டு வரலாறு அந்நாட்டின் பழங்குடி மக்களையும் வந்தேறிகளையும் (Immigrants) பிரித்துக் காட்டுவதால் ஒரு வீட்டுக்காரனுக்கு அவ்வீட்டு ஆவணம் எமக் காப்பாவது போல் ஒரு நாட்டுப் பழங்குடி மக்கட்கும் அந்நாட்டு வரலாறு சில வுரிமை வகையில் ஏமக் காப்பாம்.

த.மு.1