உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

பேரன் பாட்டனைப் பெற்றான்

ஆங்கிலேயரும்

ஐரோப்பியரும்

345

அமெரிக்கருமான

மேலையர் இற்றை அறிவியல்களில் தைைலசிறந்தவரும் வழி காட்டிகளுமாயிருப்பினும், தமிழர் நண்ணிலக் கடற்கரையினின்று தென்னாடு வந்தவரென்றும் இந்திய நாகரிகம் வேத ஆரியர் கண்டதென்றும், இருதவறான கருத்துக்கள் அவருள்ளத்தில் ஆழ வேரூன்றியிருப்பதனால், பேரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில், பிற்பட்ட சமற்கிருதத்தை முற்பட்ட தமிழுக்கடிப் படையாக வைத்தாய்ந்து, ஆரிய வெம்மணற் பாலைப் பரப்பில் அலைந்து திரிந்து வழிதெரியாது மயங்கி எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகளே என்றும், ஆயிரமாண்டிற் கொருமுறை மொழிகளெல்லாம் அடியோடு மாறிவிடுகின்றன என்றும், அதனால் மொழித் தோற்றத்தைக் காணமுடியாதென்றும் முடிவு கொண்டு மேற்கொண்டு உண்மைகாண முடியாவாறு தம் கண்ணைத் தாமே இறுகக் கட்டிக் கொண்டனர். மொழிநூல் திறவுகோல் தமிழிலேயே உள்ளதென்னும் உண்மையை அவர் உணர்வராயின் வியக்கத்தக்க உண்மைகள் வெளிப்படுவது திண்ணம். த.வ. முகவுரை

வரும் போதேனும் காத்தல்

துன்பம் வருமுன் காவாவிடினும் வரும்போதேனும் காத்தல்வேண்டும். வந்தபின் காத்தல் வெள்ளம் வந்தபின் அணைகட்டுவதும், குதிரை களவுபோனபின் கொட்டகையைப் பூட்டுவதும் நோயாளி இறந்தபின் மருத்துவம் செய்வதும் ஆகும்.

ம.வி.65