உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியும் ஆராய்ச்சியும்

5. ஆராய்ச்சி

எந்தத் துறையிலேனும் ஆராய்ச்சி என்பது கல்வியின் பிற்பட்டதே. கல்வியில்லாதவர் ஆராய்தல் ஒண்ணாது. ஓர் இயங்கியை (automobile) ஓட்டத் தெரிவது போன்றது ஆராய்ச்சி. ஓட்டத் தெரியாதவர் பழுது பார்ப்புத் தெரிந்துகொள்ள முடியாது. முதன்மொழி 1.7-8-4

அடி மணை

கலைகளும் (arts) அறிவியங்களும் (sciences)91) தற்சார்புள்ளது (Independent) (2) மற்சார்புள்ளது (dependent) என ரு திறப்படும். தற்சார்பறிவியங்களுள் ஒன்றான வரலாறு, ஏனை அறிவியங்கட் கெல்லாம் அடிமணையாயும், முதுகந் தண்டாயும் இருப்பதாகும். த.வ.முன். I நம்பிக்கையும் ஆய்வும்

ஒருபொருளை எங்கெங்குந் தேடியும் காண முடியா தென்று நம்பிக்கை கொண்டவனுக்கு எங்ஙன் தேடன் முயற்சி பிறக்கும்? எல்லாச் சொல்லும் இடுகுறிகளே என்றும், எல்லா மொழிகளும் ஆயிரம் ஆண்டிற்கொரு முறை அடியோடு மாறிவிடுகின்றன என்றும் நம்புகின்றவனுக்கு எங்ஙன் மொழியாராய்ச்சி வேட்கை எழும்!

முத்துச்சிப்பி

சொல்வேர் காண்வழிகள் செ. செ. 41:323

படிப்பு வேறு, ஆராய்ச்சிவேறு; படிப்பிற்கும் ஆராய்ச்சிக்கும் உள்ள வேற்றுமை கடற்கரையில் முத்துச் சிப்பிகளைக் காண்பதற்கும், கடலுள் மூழ்கி அவற்றை எடுத்துக் கொண்டு வருதற்கும் உள்ள வேற்றுமையாகும்.

செ.செ.50:91