உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைகீழ்ப் பார்வை

பாவாணர் உவமைகள்

347

ஒரு படத்தைத் தலைகீழ்த் திருப்பிப் பார்ப்பது போல் முதனூலை வழிநூலாகவும், வழிநூலை முதனூலாகவும் பிறழக் கொண்டு ஆராய்ச்சி நடாத்துவது ஒரு சிறிதும் தக்கதன்று.

பல்வகை நடைமொழி

குரலே சட்சம். செ. செ. 20: 330

மேலையர், இந்தைரோப்பிய மொழிக் குடும்பத்திற்கு மூலமான தமிழை அடிப்படையாகக் கொள்ளாது ஆரியத்தையே கொண்டாராய்ந்து, கோட்டைச் சுவரில் முட்டிய குருடர்போல், இடர்ப்பட்டு, தாய்மொழியும் கிளைமொழியும் என்னும் முறையின்றி, தனியாள் நடைமொழி (Personal dialect) குழு நடைமொழி (Grou[ dialect) வகுப்பு நடைமொழி (communal dia- lect) தொழில் நடைமொழி (Professional dialect) இடநடைமொழி (Local dialect) வட்டார நடைமொழி (Regional dialect) என ஒவ்வொரு பெருமொழியையும் பல நடைமொழிகளாகப் பகுத்து ஆராய்ந்து நூலாக வெளியிட்டு வருகின்றனர்.

வ.சு. பவளவிழாமலர்; செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு.4

மருத்துவம் இசை தாண்டவம்

தமிழ், ஆரியச் சூழ்ச்சியினால் நெடுங்கணக்கு முதல் பொருளிலக்கணம் வரை எல்லா நிலைகளிலும் எல்லாத் துறைகளிலும் தருக்கப் பொருளாக்கப்பட்டிருப்பதால் தமிழா சிரியர் எத்துணைப் பெரும் புலவரேனும், மொழி யாராய்ச்சியும் நடுநிலை அஞ்சாமை தன்னலமின்மை மெய்யறியவா என்னும் நாற்பண்பும் இல்லாதவர், வேர்ச் சொற்களைத் தொகுப்பது குருடன் கண் மருத்துவமும், செவிடன் இசையாராய்ச்சியும், சப்பாணி தாண்டவம் பயிற்றலும் செய்வதொத்ததே; கல்விவேறு, ஆராய்ச்சி வேறு. வேர்ச்.முக.11

குன்று முட்டிய குருடர்

தமிழ் குமரிநாட்டில் தோன்றிய தொன்மூதியன் மொழி யாதலின், அந்நிலமிருந்த இடத்தை யொட்டிய தென்னாட்டுத் தென்கோடியில் வழங்கும் தமிழொலிகளை, தமிழ் வாயிலாகத் தான் அறிய முடியுமேயன்றிப் பிற வடநிலத் திரிமொழிகள்