உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

வாயிலாய் அறிய முடியாதென்றும் அங்ஙனம் அறிய முயல்வார் குன்றுமுட்டிய குருடர்போல இடர்ப் படுவாரென்றும் அறிந்து கொள்க. வேர்ச்.99

தலைகீழ் வைத்துத் தவறாகப் பொருள் கொள்ளல்

முந்திய மொழிகளில் சொல்வடிவம் இயல்பாயும் பிந்திய மொழிகளில் திரிந்தும் இருக்கும். திரிந்த மொழியை முந்தினதாகவும் இயல்பான மொழியைப் பிந்தினதாகவும் கொண்டு ஆராயப்புகின், பேரனைப் பாட்டனாகக் கொண்டு மரபுவழி கூறுவதும், சிறிது சிதைந்துபோன ஏட்டை அல்லது கல்வெட்டைத் தலை கீழ் வைத்துத் தவறாகப் பொருள் கொள்வதும் போன்றதாகும். ச.வி.முக.].

வாலும் தலையும் நீக்கிய முண்டம்

கால்டுவெலார்க்குப் பிற்பட்ட மேலை மொழி நூலா ரெல்லாம் பேரனைப் பாட்டனாகப் பிறழவுணர்ந்து வரலாறு தீட்டுவார் போல், சமற்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு மொழியாராய்ச்சி செய்ததனால், முட்டுப்பட்டு மதிமருண்டு, 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்னும் (தொல்.பெயர்.1.) தமிழ்நெறிமுறைக்கு நேர்மாறாக, எல்லா மொழியும் இடுகுறித் தொகுதியே என்று தம் இருகண்ணையும் இறுகக் கட்டிக்கொண்டு, ஓர் உயிரியின் தலையும் வாலும் நீக்கி முண்டத்தை மட்டும் வரைந்தாற்போன்று முன்பின் வரலாற்றை முற்றும் புறக்கணித்து மொழிகளின் இற்றை நிலையை மட்டும் எடுத்துக் கூறும் வண்ணனை மொழிநூலை (descriptive Linguistics) வளர்த்து மாணவரையும் ஆசிரியரையும் மயக்கி வருகின்றனர், வண்ணனை ஒப்பியல் வரலாறு மூவியல்களையும் ஒருங்கே கொண்டதே மொழிநூல்.

ஆகிய

தமிழ்நாடு ஆளுநர் உயர்திரு கே.கே.ஷா. அவர்கட்குப் பாராட்டு செ.50:89

கேசவக் கிருட்டிணனே ஏசுக்கிறித்து

கிரேக்க நாட்டில் என்றேனும் தமிழ் வழங்கிய தென்பதற்கோ தமிழர் வாழ்ந்திருந்தார் என்பதற்கோ ஒரு சான்றும் இன்மையானும்; தமிழ்ச் சொற்களும் தமிழர் பழக்க வழக்கங்களும் கிரேக்க நாட்டில் மட்டுமன்றி உலகத்திற் பல இனத்தாரிடையும்