உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

349

காணப்படுவதாலும்; கிரேக்க நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு திரவிட மொழியும் வழங்காமையானும் தெரிமில என்னும் சொல்லைத் திர-இல்-அர் என்று பிரித்து, கடற்கரையில் குடி கொண்டவர் என்று பொருள் கூறுவது, கேசவக் கிருட்டிணனே ஏசுக் கிறித்து என்று சொல்வதொக்கு மாதலானும்; ஒரே சொல்லின் ஒருபுடை ஒப்புமைபற்றி ஒரு நாட்டாரை ஐயாயிரம் கல் தொலைவிற்கப் பாற்பட்ட வேறொரு நாட்டினின்று வந்தவராகக் கொள்வது, மொழிநூன் முறைக்கு முற்றும் முரணான தாகலானும்; தோற்றம் முதல் இதுவரைப்பட்ட வளர்ச்சி நிலையெல்லாம் தொடர்பாகக் காட்டிக்கொண்டு தொன்று தொட்டுத் தென்னாட்டிலேயே தமிழ் வழங்கி வந்திருத்தலானும்; கிரேக்க நாட்டு மூலக் கொள்கை மிகத் தவறானதென்று கூறிவிடுக்க. த.வ.முன்.33

பொறியறிஞனும் மொழியறிஞனும்

ஒரு பொறியறிஞன் ஒரு பொறியில் இல்லாத உறுப்பைக் கண்டு கொள்வது போன்றே, ஒரு மொழியறிஞனும் அம்மொழியில் இறந்து பட்ட சொற்களிற் சிலவற்றை அவற்றொடு தொடர்புள்ள பிறசொற்களின் துணை கொண்டு அறியவியலும்.

சூழ்ச்சிப் பொறியமைப்பும் பொறிக்கலையும்

த.வ.64-5

குடியேற்றப் பாதுகாப்பான ஒரு சிறு பகுதியால் தமிழின் தாய்மை குன்றிவிடாது. சில சூழ்ச்சிப் பொறிகளின் பழைய அமைப்புக்கள் இன்று கீழ்நாட்டில்தான் உள்ளன. இதனால், மேனாட்டார் கீழ் நாட்டாரிடமிருந்து பொறிக் கலையைக் கற்றார் என்றாகாது. இங்ஙனமே குடியேற்றப் பாதுகாப்பும்.

அயன்மை வெளிப்பாடு

தி.தா. 112

ஒரு நாட்டான் அயல்நாடு சென்று பல்லாண்டு தங்கிக் குடியுரிமை பெற்றுவிடினும் அவன் அயன்மையை மறைக்க முடியாது.யாரேனும் மறைக்க முயலின் வரலாற்றாராய்ச்சி அதை வெளிப்படுத்திவிடும். அங்ஙனமே ஒரு மொழிச் சொல்லும் பிறமொழிச் சென்று வழக்கூன்றினும் அதன் அயன்மையை