உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

மறைக்க முடியாது. யாரேனும் மறைக்க முயலின் வரலாற்றாராய்ச்சி அதனை வெளிப்படுத்திவிடும்.

சிக்கல் எடுத்தல்

சொற்குலமுங் குடும்பமும் செ.செ. 22:17

ஒரு சிக்குப்பட்ட நூற்கண்டைச் சிக்கல் எடுப்பதற்கு முதலாவது அதன் இரு முனைகளில் ஒன்றைக் காணவேண்டும். ஒரு பொருளுரிமைபற்றிய வழக்கைத் தீர்ப்பதற்கு முதலாவது, முதன்முதல் அதை வைத்திருந்தவன் யார் என்று அறிய வேண்டும். அங்ஙனமே, மொழி நூலை உருவாக்குவதற்கு முதலாவது, மாந்தன் தோன்றிய இடம் எதுவென்றும் தொடர்புள்ள மொழிகட்குள் எது முந்தியது என்றும் அறிதல் வேண்டும்.

ஆடு-ஓநாய்-ஓரி

சு.வி.முக.7

பிராமணர் பெரும்பாலும் தமிழுக்கு மாறாயிருப்பதால் அவரைக் கொண்டு தமிழை ஆராய்வது பாலுக்குப் பூனையையும், ஆட்டுக் கிடைக்கு ஓநாயையும் காவல் வைப்பது போன்றதே யாகும். தென் மொழி வடமொழிப் பிணக்கைத் தீர்க்க அவரை நடுவராக அமர்த்துவது ஆட்டுக்குட்டிக்கும் நரிக்கும் இடைப் பட்ட வழக்கைத் தீர்க்க ஓர் ஓரியை அமர்த்துவது போன்றதே. செ.செ.50:92

கத்தரிக்காயும் கழுத்தும்

கத்தரிக்காய் அறுக்க வாங்கிய கத்தி கழுத்தறுக்குங் கருவியாயிருப்பின் அது கழுத்தறுத்தான் குற்றமா? கத்தியின் குற்றமா? மாந்தரை யெல்லாம் கடவுளின் மக்களாக்கி உடன்பிறப்பு அன்பால் ஒன்றுபட்டு இன்புற்று வாழச் செய்யும் உயர்ந்த மதவியலை ஒரு தன்னலக் கொள்ளைக் கூட்டம் தாம் வாழவும் பிறர் தாழவும் பயன்படுத்தின் அக்குற்றம் எங்ஙனம் மதவியலைச் சாரும்? த.ம.186

மொழிநூல் வானூல்

கணிதம் வானூல் முதலிய கலைகளைப் போல் மொழிநூலும் ஒரு திட்டமான நெறி முறைப்பட்ட கலையே.

சு.வி.முக.5