உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

351

மேனாட்டு வானூற்கலை சர் ஐசக்கு நியூட்டன் காலத்தில் தான் அவரால் உருவாயிற்று. அதற்கு முன் அது வழிவரம்பின்றிப் பழிபடு நிலையில்தான் இருந்தது. அது போன்றே இற்றை மொழிநூலும். சு.வி.முக.6

முற்செலவு முதல் துருவல் முடிய

முற்செல்லச் செல்ல, சேரவேண்டிய இடத்திற்கு நெருக்கம் ஏற்படுகின்றது; சேர்ந்தபின் பொருந்தல் நேர்கின்றது. இடை வழியிற் சுவரும் கல்லும் மலையும் போலத் தடை ஏற்படின் வளைய அல்லது பக்கமாகத் திரும்ப நேர்கின்றது. தடுத்த பொருளையும் இடத்தையும் துளைக்க முடியுமாயின் எலி சுவரையும் மாந்தன் மலையையும் துளைத்தல் நேர்கின்றது. துளைத்து மறுபுறங்காணின் அதுவே துருவல். அதன்பின் தோன்றல் முதலிய பழைய நிலைமைகளே மீண்டும் நிகழும். மண்ணில் வேர் இறங்குதலும் மரத்தில் ஆணி பதிதலும் ணி பொத்தகத்திற் புழுவரித்தலும் போன்ற செயல்களாயின் வளைதலின்றியே துளைத்தலும் துருவலும் நிகழும்.

இரு கிழமை

5.01. 61

தோன்றுதல் முன்வருதல் ஆகலின், தோன்றற் கருத்திலேயே தற்கிழமை பிறிதின் கிழமை ஆகிய இருவகை முன்மைக் கருத்தும் அடங்கியுள்ளன. முன்கிளையும் முன்கையும் போன்றவை தற்கிழமை முன்மை; முன் பொறையும் (பாரமும்) முன் தூதனும் போன்றவை பிறிதின் கிழமை முன்மை.

இயற்கைத் தோன்றலும் செயற்கைத் தோன்றலும்

த.வ.61

தோன்றல் என்பது, தாயினின்று குழவியும் மரத்தினின்று துளிரும் தோன்றுவது போன்ற இயற்கைத் தோன்றலும்; வீட்டினின்று மாந்தனும் வளையினின்று எலியும் தோன்றுவது போன்ற செயற்கைத் தோன்றலும் ஆக இருவகைப்படும்.

த.வ.61

குத்தலும் துளைத்தலும்

குத்தலும் துளைத்தலும் கலத்தை நீர்மேல் வைத்தலும் அதற்குள் முழுக்குதலும் போன்ற நெருங்கிய அல்லது அடுத்து நிகழும் வினைகள்.

வேர்ச்.246