உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

வடிவியல்

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

வடிவியலாவது, குழவி நிலையும் குழவி நிலையும் பிள்ளைமையும் இளமையும் மகன்மையும் முதன்மையும் போல அல்லது புல்லும் பூண்டும் செடியும், கொடியும் மரமும்போல மொழி வளர்ச்சி தொடர்ச்சிகளின் பல்வேறு நிலைகளைப்பற்றியது.

மணிநோட்டகர்

உலக மொழிகளின் தொடர்பு. செ. செ. 23:166

ஒவ்வொரு துறையிலும் உண்மையான ஆராய்ச்சியாளர்க்குப் பிறப்பிலேயே அதற்குரிய ஆற்றல் அமைந்து விடுகின்றது. அது பின்னர்க் கல்வியாலும் பயிற்சியாலும் வளர்ச்சியடைகின்றது. தேர்ச்சி பெற்ற மணி நோட்டகன் தொண்மணிகளுள் (நவரத்தினங்களுள்) எதைக் காட்டினும் உடனே அதன் உண்மையான மதிப்பைச் சொல்லிவிடுகின்றான். அது ஏனை யோர்க்கு இயலாமையால் அதை உன்னிப்பு வேலையென்று தள்ளி விட முடியாது. இங்ஙனமே சொல்லாராய்ச்சி அல்லது மொழியாராய்ச்சித் திறன் இயற்கையிலேயே அமையப்பெற்ற ஒருவர், இருவகை வழக்குத் தமிழையுங் கற்ற பின் ஒவ்வோரெழுத்தும் சொல்லும் திரியும் வகைகளை யெல்லாம் கண்டு வரலாறு மாந்தனூல் (Anthropology) ஞாலநூல் (Geography) நிலநூல் (Geology) உளநூல் (psychology) முதலிய அறிவியல் களோடு பொருந்த ஆராய்வாராயின் பிறருக்குத் தோன்றாத சொல்லாக்க நெறிமுறைகளும் சொல்வேர்களும் சொல் வரலாறுகளும் அவருக்கு விளங்கித் தோன்றும்.

மணிநோட்டகன்

தமிழர் வ. 18.

வயிரக் கற்களின் உயர்வு தாழ்வை மணி நோட்டகன் கண்ணே காண்பதுபோல் சொற்களின் வேரையும் பொருட் கரணியத்தையும் மொழிநூல் வல்லான் அகக் கண்ணே காணுமென்றும் அறிவொடு உயிருமற்ற அஃறிணைக்கருவிகள் காணாவென்றும் அறிதல் வேண்டும்.

வ.மொ.நூ.வ.105