உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

பிராமி எழுத்தும் தமிழ்நெடுங்கணக்கும்

353

அசோகன் கல்வெட்டுச் செய்திகளாற் கவரப்பட்ட தமிழகப்பொதுமக்கள், அவற்றைத் தாமே படித்தறிய வேண்டும் என்னும் அவாவினால் உந்தப்பட்டு அவற்றின் பிராமி யெழுத்தைப் பயின்று கொண்டனரென்றும் அதுவே தமிழ் நெடுங்கணக்குத்தோற்ற மென்றும்..... கண்டிருப்பது ஒரு கல்லறைத் தோட்ட வாயிலின்மேல் "நாய்கள் புகற்க" என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்த பலகையைக் கண்டவுடன் ஒரு நாய்புகாது நின்றுவிட்டது என்று கூறும் பிக்குவிக்குத் தாட்களை (Pickwick Papers) விட இது நகைச் சுவை விஞ்சியதே.

முழுப் பூசணிப் காயைச் சோற்றுள் முழுக்குதல்

செ.செ. 54:428

கி.மு.2.ஆம் நூற்றாண்டில் வடநாட்டினின்று வந்து வைகை மதுரையில் தங்கிய சில சமணரும் பவுத்தரும் தங்கள் வடநாட்டெழுத்தோடு தமிழுக்கேற்பச் சில புதுக் குறிகளையும் புனைந்து பொறித்த கல்வெட்டுக்களைக் கொண்டு முழுப்பூசணிக் காயைச் சோற்றுள் முழுக்குவது போல், தமிழ் நெடுங் கணக்கே அசோகப் பிராமி எழுத்தினின்று தோன்றியதாகக் கூறி வருகின்றனர்.

ஆழியை நாழிகொண்டளப்பது

பிற்காலக் கல்வெட்டுக்களைக் கொண்டு தமிழின் தொன்மையை அறிவது ஆழியை நாழிகொண்டு அளப்பது போன்றதே.

முடவன் முண்மரமேறல்

ம.வி.3.

தமிழ்ப் பொதுமக்கள் அசோகன் கல்வெட்டினின்று தமிழெழுத்தைக் கற்றுக்கொண்டது (என்பது) முடவன் முண்மரமேறிக் கொம்புத்தேனைக் கொணர்ந்த செய்தியே யாகும்.

புதைந்தவையெல்லாம் பழையவையல்ல

செ.செ.54:430

மலைவாழ் குலத்தாரெல்லாம் முந்தியல் மாந்தரல்லர். புதைந்து கிடக்கும் கற்கருவிகளெல்லாம் கற்காலத்தன வல்ல.

தமிழர் வ.22