உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

பூட்டனை நம்பாதார்

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

முக்கழக உண்மையை இற்றை இலக்கியச் சான்றின்மை பற்றி நம்பாதார் பட்டனைப் பெற்ற பூட்டனைக்கண்டா ராகாமையால் அவன் இவ்வுலகில் இருந்ததை நம்பாதாரே.

தலைகீழ் அடிப்படை

த.இ.வ.எ.

ஒரு கொடி வழியிற் பின்னோரை முன்னோராக வைத்தாராயின், பேரன் பாட்டனையும் மகன் தந்தையையும் பெற்றதாகத்தான் முடியும். தலை கீழான அடிப்படை தலைகீழான முடிவிற்கே கொண்டு செல்லும். இங்ஙனமே, குமரி நாட்டுத் தமிழ நாகரீகத்திற்கு நெடுங்காலத்திற்குப் பின் அதன் வழிவந்த ஆரிய நாகரிகம் மூலமாகக் கூறப்படுகின்றது. தமிழர் வ.17.

பேரன் பாட்டனைப் பெற்றான்

தமிழின் தொன்மை தென்மை முன்மை மென்மை முதலிய தன்மைகளை அறியாமையால் கால்டுவெல் உள்ளிட்ட மேலை யாராய்ச்சியாளர் ஆரிய ஏமாற்றை நம்பித் தமிழைச் சமற்கிருத அடிப்படையில் ஆய்ந்து பேரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில் தமிழ்நெடுங் கணக்கு சமற்கிருதத்தைப் பின்பற்றிய தென்று முடிவுகொண்டு விட்டனர்.

நரிவாலும் கடலாழமும்

த.வ.119.

நரி தன் வாலை விட்டுக் கடலாழம் கண்டாற் போல் தமிழின் தொன்மையை ஆய்ந்து அதன்தோற்றம் கி.மு. 1500 என்று வரையறுத்திருப்பது தன்னாராய்ச்சி இல்லாத தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்க்கு எத்துணை அறிவியல் உண்மையாகக் காட்சி யளிப்பினும் முறைப்பட்ட மொழியாராய்ச்சியாளர்க்கு எத்துணை நகையாட்டிற்குரிய பகடிக் கூத்தாம். முதன்மொழி 1.3:9

ஓசையும் இரும்பும்

மொழிநூலின் திறமறியாத சிலர் ஓசை நிலைப்பானது; ஆகவே ஓசை வடிவானமொழிகளும் நிலைப்பானவை என்று கூறுவர். இது, இரும்பு நிலைப்பானது. ஆகவே, இரும்பு வடிவான இயந்திரங்களும் நிலைப்பானைவை; புதிதாய் உண்டாயவை அல்ல என்று கூறுவது போன்றதே.

தி.தா.1