உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

முந்துமாந்தனும் குழந்தையும்

355

மொழி நிரம்பாத முந்து கால (Primitive.) மாந்தன், கருத்து வெளியீட்டில் குழந்தை போன்றவன். அவன் ஆ.ஈ.வா.போ.கீ.மே முதலிய சில தனியசைகளாலும் சில சைகைகளாலுமே தன் கருத்தைப் புலப்படுத்தினான். இவ்வியல்பை இன்றும் சில மலைவாணரிடமும் தென்கண்டத் தீவாரிடமும் காணலாம்.

மலை விளக்கு

சு.வி.4.

ஆஈஊ என்னும் ஒலிகளை மொழி மூல வொலிகளாகக் கூறுவது இன்று மலையேறிவிட்டதெனின் அது குன்றின் மேலிட்ட விளக்குப் போல விளங்குதற்கு மலையேறிவிட்ட தென்க. பிஞ்சு காயாதல்

சு.வி.6.

உண்மை அறியாதார், தமிழிலும் முதற்காலத்தில் எடுப் பொலிகள் (G,J,d,d,b) இருந்து பின்னர் எடுப்பிலா வொலிகளாக மாறின எனப் பிதற்றுவர். தமிழ் தோன்றியது குமரி நாடென்னும் உண்மையறியின் அங்ஙனங் கூறார். எடுப்பிலா வொலி எடுப் பொலியாக மாறுமேயன்றி, எடுப்பொலி எடுப்பிலா ஒளியாகத் திரியாது. பிஞ்சு முற்றிக் காயாவதேயன்றி, காய் இளந்து மீண்டும் பிஞ்சாவதில்லை. த.இ.வ.முன்.10

விண்ணக மீனும் மண்ணக மானும்

அருச்சுனன் திருநீராட்டிற்குத் தென்னாடு வந்த போது சித்திராங்கதன் என்னும் பாண்டியன் மகளை மணந்தான் என்னும் கதைபற்றி, பாண்டவன் என்னும் சொல்லினின்று பாண்டியன் என்னும் பெயர் திரிந்த தென்று வரலாற்றிற் கெட்டாத தொன்மை வாய்ந்த பாண்டியக் குடிப்பெயரைக் கி.மு10-ஆம் நூற்றாண்டினனான பாண்டு வொடு தொடர்புபடுத்துவது, விண்ணக மீனையும் மண்ணக மானையும் ஒன்றாய் இணைப்பது போன்றதே. அருச்சுனன் பாண்டியன் மகளை மணக்கு முன்பே அவன் மாமன் பாண்டியன் எனப் பெயர் பெற்றிருந்தமையை அக்கதையே கூறுகின்றதே!. த.வ.முன்.43