உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

இராமர் அணைக்கட்டு

தமிழ் நாட்டின் தென்பகுதி கடலுண்முழுகி, இலங்கை மிக விலகிப் போனபின் சரித்திரமறியாத மக்களால் அது இராமாயணக்கதை யொட்டி இராமர் அணைக்கட்டு எனப்பட்டது. ஆதாம் வாராவதி (Adams Bridge) என்னும் பெயர் அதற்கு எவ்வளவு பொருந்துமோ அவ்வளவே இராமர் அணைக்கட்டு என்னும் பெயரும் பொருந்துவதாகும். @. OLDIT.53.

சான்றுகள் அழிபாடு

ஆரியர் வருகைக்கு முற்பட்ட முதலிரு கழக இலக்கியம் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டமையால் அதினின்று சான்று காட்ட இயலாதென்றும், மாடம் அழிந்த பின் அதினின் றெடுத்த உறுப்புக்களைக் கொண்டமைத்த வடம் போன்ற பிற்காலத் திலக்கியத்தினின்றே சான்று காட்டப் படுமென்றும் அறிந்து

கொள்க.

த.ம.58.