உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்படையும் மட்படையும்

6.சொல்

நிலம் ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கப்பட்டிருக்கும் பல படைகளாய் அமைந்திருப்பது போல் சொற்களும் ஒன்றன் மேல் ஒன்றாய் வளர்ந்துள்ள எழுத்துக்களும் அசைகளுமாகிய பலபடைகளைக் கொண்டுள்ளது.

சொல்லும் செல்வமும்

த.வ.234

சொல்லும் பொருள் போல் ஒரு செல்வமே. ஒரு செல்வன் பொருளாற் பெறும் நன்மையை ஒரு புலவன் சொல்லாற் பெறுகின்றான். த.க.கொ.த.3

செல்வப் பெருக்கமும் சொற் பெருக்கமும்

முன்னோர் ஈட்டிய செல்வத்தைப் பெருக்குவதற்குப் பின்னோரும் ஈட்டுவதுபோல் முன்னோர் ஆக்கிய மொழியை வளம்படுத்துதற்குப் பின்னோரும் புதுச் சொற்களை ஆக்குதல் வேண்டும். த.க.கொ.த.3

கடன் கோடல்

கடன் கோடலால் ஓர் ஏழைக்கு நன்மை. ஆனால் செல்வனுக்கோ இழிவு. அதுபோல் கடன் சொற்களால் பிற மொழிக்கு வளர்ச்சி: தமிழுக்கோ தளர்ச்சி. @.ALDIT.366

பொருட்கடன், சொற்கடன்

பொருட்கடன் கோடல் போன்றே சொற்கடன் கோடலும் தேவையும் தேவையின்மையும் ஆகிய இருவகை நிலைமைகளில் நேர்வதாகும். ஆங்கிலம் போன்ற மொழிகளில் சொல்வளமின் மையால், அவற்றிற்குப் பிறமொழிகளினின்று கடன்கோடல் இன்றியமையாததாயிற்று. தமிழ் பெருவள மொழியாதலின் அதற்குச் சொற்கடன் தேவையில்லை. தமிழில் இதுவரை புகுந்த