உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

அல்லது புகுத்தப்பட்ட அயற்சொற்களெல்லாம் அதன் வளத்தைக் குறைத்து அதன் தூய்மையைக் குலைப்பதற்குக் காரணமாயிருந்தவையே. த.க.கொ.த.2,3

ஆங்கில மொழி கடன் கொள்ளல்

ஆங்கிலர் தாம் புதிதாகக் கண்ட அறிவைப் புலப்படுத்த இலத்தீன் கிரேக்கச் சொற்களைக் கடன் கொள்வது நெல்லை விளைவித்த உழவன் அதைச்சந்தைக்குக் கொண்டு செல்ல வண்டியையும், அரிசியைக் கடையில் வாங்கினவன் அதை வீட்டிற்கு எடுத்துச் செல்லப் பையையும் இரவல் வாங்குவது போன்றதே. நெல்லை விளைவிக்காமலும் அரிசியை விலைக்கு வாங்காமலும் வண்டியையும் பையையும் மட்டும் இரவல் வாங்கிப் பயனில்லை. உள்ளடக்கமே கொள்கலத்திலும் சிறந்தது. ம.வி.166

பையும் வண்டியும் இரவல்

ஆங்கிலர் தம் கருத்தை உணர்த்தப் பிறமொழிச் சொற்களைப் பயன் படுத்தியது, பங்கீட்டுக் காலத்தில் மிகுதியாய் அரிசி கிடைக்கும் இடத்தில் பையையும் உழவன் தான் விளைத்தகூலத்தைச் சந்தைக்குக் கொண்டு போக வண்டியையும் இரவல் பெற்ற தொக்கும்.

புதுமணிப் பவளப்புன்மையும் புரைமையும் செ.செ. 52:582. பேதையும் சூதனும்

இற்றைத் தமிழிற் கலந்துள்ள பிறரெழிச் சொற்க ளெல்லாம், தமிழர் தாமாக விரும்பிக் கடன் கொண்டவையல்ல. செந்தமிழ்காக்கும் நக்கீரர் மரபு அற்று. ஆரியம் போற்றும் கொண்டான் மரபு ஓங்கி, சேர சோழ பாண்டியர் ஆட்சியை வேறு பல நாட்டார் கவர்ந்து மொழியுணர்ச்சியும் வரலாற்றறிவும் தமிழரிடை முற்றும் மறைந்த காலத்துத் தமிழ்ப் பகைவரால் தமிழைக் கெடுத்தற்கென்றே புகுத்தப்பட்டவையாம். இது ஒரு பேதையின் செல்வத்தைக் கவர்தற்கு, ஒரு சூதன் அவனுக்கு வலியக் கடன் கொடுத்து வட்டி மேல் வட்டிக் கணக்கெழுதிய தொத்ததே.

த.க.கொ.த.3.