உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

1) தமிழ் திரவிடத்திற்குத் தாய்.

2) தமிழ் ஆரியத்திற்கு மூலம்.

-

3) தமிழ் தோன்றிய இடம் தமிழன் பிறந்தகம் - மறைந்த குமரிக்கண்டம்.

இம் முக்கொள்கைகளை நிலைநாட்டுவதையே தம் வாழ்வுக் குறிக்கோள்களாகக் கண்டவரும் கொண்டவரும் பாவாணர். இவற்றுள் முதற் கொள்கையை விளக்குவதற்கே எழுதப்பட்டது, திரவிடத்தாய். இரண்டாம் கொள்கையை நாட்டுதற்கே எழுதப்பட்டது, வடமொழி வரலாறு. மூன்றாங் கொள்கையில் முன்னிரு கொள்கைகளும் அடங்கி யிருத்தலால் ஒப்பியன் மொழிநூல், The Primary Classical Language of the world. தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, வேர்ச் சொற் கட்டுரைகள், தமிழின் தலைமையை நாட்டும் தனிச் செற்கள், An Epitone of the Lemurian Language and its ramifications (cyclostyled Book let) என்பவை. இக்கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டார் அவையமே உலகத் தமிழ்க் கழகமாகத் தோன்றியது; ஊன்றியது; கிளை விரித்துப் படர்ந்தது; இந்நாளிலும் அவ்வமைப்பும் அமைப்புடை யாரும் நீறுபூத்த நெருப்பெனச் சில இடங்களிலும், இடையிடையே கொழுந்து விட்டெரியும் சுடரெனச் சில இடங்களிலும், நுந்தா விளக்கெனச் சில இடங்களிலும் உரிமைக் கடனாற்றி வரக் காண்கிறோம். பிளவுக்கும் பிரிவுக்கும் உட்பட்டாலும், உரிய அமைப்பு உயிர்ப்போடு திகழவே செய்கின்றது! இவ்வமைப்பின் தோற்றமும காப்பும் பாவாணர்தம் குறிக்கோள் வெற்றியெனல் சாலுமா?

அறிஞர் காரல் மார்க்கசு கொள்கை வென்றதா? தோற்றதா? மார்க்கசு தெரிவியல் அறிஞர்! அவர் தம் கொள்கையைத் தெரிவியல் தெளிவால் நிலைபெறுத்திக் காட்டிய அளவே அவர்தம் வெற்றி! அதனைப் புரிவியல் வெற்றியாக்கத் தோன்றினார் லெனினார்! எதிரிடைப் பட்டாரும் எளிதாக மதிக்க வொண்ணாப் பெருவெற்றி எய்தினர்!

தெரிவியலும் புரிவியலும் இருவேறு இயல்கள்! முன்னதைச் சார்ந்ததே பின்னது எனினும், முன்னதைச் செயவல்லார் பின்னதையும் செயவல்லாராக இருத்தல் வேண்டும் எனக் கருதுவார். இவ்வீரியல் அடிப்படையும் அறியார்.