உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

மூலத்தினாலும் தொடர்புடைய தமிழ்ச் சொற்களாலும் அவை தமிழ் என்றே அறியப்படும். வேர்ச்.முக.10.

செல்வத்தாயும் மகளும்

தமிழில் மிகுந்த சொல்வளமுண்டு. ஒரு செல்வத்தாய் வீட்டினின்று ஒருவகைப்பட்ட பலபொருள்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு புதல்வியும் எடுத்துச்செல்வது போல், தமிழிலுள்ள ஒரு பொருட் பல சொற்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு திசை மொழியும் கையாண்டுள்ளது.

தாய்வீட்டுக் கலங்கள்

த.வ.256.

குமரி நாட்டுத் தமிழே திரவிட மொழிகட்கெல்லா தாயாதலால் முன்னதன் ஒரு பொருட் சொற்களினின்றே பின்னவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சொல்லைத் தெரிந் தெடுத்தாளுகின்றது. இது தாய்வீட்டிலுள்ள ஒரு வினைக்குப் பயன்படும் பல்வகைக் கலங்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு மகளும் எடுத்துப் பழங்குவது போன்றது.

தாய் வீட்டில் வழங்காத கலங்கள்

த.இ.வ.19

ஒருமொழியின் தாய்வழக்கில் ஒரு பொருட் கரிய பல சொற்களில் வழக்கற்றவையெல்லாம் கிளைவழக்குகளில்தான் வழங்கும். இது ஒரு தாய் வீட்டிலுள்ள வழங்காத கலங்களை யெல்லாம் மக்கள் கொண்டுபோய் வழங்குதல் போன்றது.

தாய்படமும் புதல்வியர்படமும்

QALDIT.162.

ஒரு குடும்ப மொழிகளின் பொதுவியல்பைக் கொண்டு அவற்றின் தாய்மொழியை மீள அமைக்கலாம் என்பது, இறந்துபோன ஒருதாயின் உருவப் படத்தை அவள் புதல்வியரின் உருவப் படங்களை ஒப்பு நோக்கி அமைக்கலாம் என்பது போன்றதே.

இலையும் மரமும்

வ.மொ.நூ.வ.102.

ஒரு மரத்தினின்று பறிக்கப்பட்ட இலைகள் வேறோர் டத்திற் கிடப்பின், அம் மரத்தினின்று அவ்விலைகள் வந்தன வென்று கொள்வதல்லது, அவ்விலைகளினின்று அம் மரம்