உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

361

வந்ததென்று கொள்வது எங்ஙனம் பொருந்தும்? ஒரு பெருமரத்தின் வேருந்தூரும் அடியுங்கவையும் கொம்புங்கிளையும் போத்துங் குச்சும் குழையும் கொழுந்தும் போல் ஏறத்தாழ ஐம்பதினாயிரம் சொற்கள், எளிய வொலிப்பட்ட இயற்கையான தோற்றமும் பல்வேறு நிலைப்பட்ட வளர்ச்சியும் வேர்ப்பொருட் கரணியமுங் காட்டி ஒரே தொடர்பு கொண்டு வரலாற்றிற் கெட்டாத் தொன்றுதொட்டு இத் தென்னாட் டிலேயே வழங்கிவரவும் அவற்றைச் சிறிதும் ஆராயாதும் நோக்காதும் வேற்று நாட்டிலிருந்து வந்தனவென்று கொள்வது, எத்துணைப் பொருந்தாக் கொள்கையாம். த.வ.முன்.24

மரமும் வேரும்

பல மரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கொண்டிருப்பின், பார்த்தமட்டில் அவற்றின் அடிகளைக் காண்பது அரிதாகும். அவற்றின் நுனிக் கொழுந்தில் இருந்து இணுக்கும் வளரும் குச்சும் போத்தும் சினையும் கொம்பும் கிளையும் கவையுமாக ஒவ்வொன்றாய்க் கீழ்நோக்கிப் பிரித்துக் கொண்டே வரின் இறுதியில் நிலத்தின்மேல் முதற் கீழ்ப்பகுதியாக வுள்ள அடியைக் காணலாம். அதன்பின் அவற்றின் வேரைக் காண்பது தேற்றமாயினும் நிலத்தைத் தோண்டினாலன்றிக் காண முடியாது.இப் பன்மரப் பிணையல் போன்றே பல அடிகளினின்று கவைத்துக் கிளைத்துப் பல்கிப் பெருகியுள்ள சொற்றொகுதிகளும் பார்த்தமட்டில் பிரித் துணரப் படாவாறு தம்முள் மயங்கிக் கிடக்கின்றன. அவற்றின் அடியைக் காண்பதற்கும் மேல் இருந்து கீழ்நோக்கி வரல்வேண்டும். அடியைக் கண்ட பின் ஆழ்ந்த ஆராய்ச்சியினாலன்றி வேரைக் காணமுடியாது.

குடும்பமும் குலமும்

சொற்குலமும் குடும்பமும் செ. செ. 22.225.

ஒரு குடும்பம் பல குடும்பங்களைத் தோற்றுவித்தலும், அப் பல குடும்பமும் சேர்ந்து ஒரு குலமாதலும் போல, ஒரு சொற் குடும்பமும் பல குடும்பங்களைத் தோற்றுவித்தலும், அப் பல குடும்பமும் சேர்ந்து ஒரு குலமாதலும் உண்டு. எடுத்துக்காட்டாக தின், திரி, திருகு, திரும்பு, திறம்பு, திமிறு முதலிய சொற்களோடு சேர்க்கப்படின் தில் குடும்பமும் ஒரு குலமாகிவிடும்.

சொற்குலமும் குடும்பமும் செ. செ. 22;112.