உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

குலமும் குடும்பமும்

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

வகு என்னும் அடியின் கீழ்க் காட்டப்பட்ட சொற் களெல்லாம் கொட்பாட்டன்-பாட்டன் மகன்-பேரன்-கொட்பேரன் என்ற தொடர்புபோலத் தொடர்பு பட்டிருப்பதை (அறிக).

சொற்குலமும் குடும்பமும், செ.செ.22, 72.

கனியிருக்கப் பூப்பிஞ்சு கவர்தல்

செய்துகொண்டு என்னும் நிகழ்கால வினையெச்சம் (Present Participle) உலக வழக்கில் இருக்கவும் அதைப் பயன்படுத்தாது.... இடர்ப்படுவது கனியிருக்கப் பூப்பிஞ்சைக் கவர்வ தொப்பதே.

புதுத் தண்டின் பூணும் பழந்தண்டின் பூணும்

த.வ. 222

சொல்லின் ஈறு முதனிலையினின்று பிரியாது அதனொடு ரண்டறக் கலந்து நிற்பது, சொல்லின் திரிபு முதிர்ச்சியை யன்றி மொழியின் உயர்நிலையைக் குறிக்காது; புதுத் தண்டின் பூண் பிரியக் கூடிய நிலையையும், துருப் பிடித்த பழந்தண்டின் பூண் பிரிய முடியாத நிலையையும் ஒப்பு நோக்கிக் காண்க.

பெற்றோர் பிள்ளைகள் ஒப்பு

வ.மொ.நூ.வ.98.

குணம் குறிகளில் பெற்றோர்க்கும் பிள்ளைகட்கு முள்ள ஒப்புமை போல, சொன்னிலையிலும் சொல்லாக்க நெறிமுறை யிலும் மரபியல் உறவுற்ற மொழிகளிடை ஒப்புமையுண்டு.

பிஞ்சு காய் கனி

உலக மொழிகளின் தொடர்பு செ.செ. 23:166

ல, ள, ழ ஆகிய மூன்றும் முறையே பிஞ்சும், காயும், கனியும் போல மெலிந்தும் திரண்டும் முதிர்ந்தும் உள்ள ஒரே ஒலியின் வேறுபாடுகள் ஆதலின், சொற்களில் ஒன்றுக் கொன்று போலியாக வருவதுண்டு.

எ-டு: வேலை -வேளை, பவளம் -பவழம்

சொற்குலமும் குடும்பமும் செ.செ. 22:227.