உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

அகரமுதலித் திருத்தக் குழுவும் நரிபரியாக்கலும்

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலியைத் திருத்துதற்கு அமர்த்தப்பட்ட குழுவிலுள்ள தமிழ்ப் புலவரை நோக்கின், நரி பரியாக்கிய சிவபெருமானும் தம் திருவிளை யாடல் பெருமை இழந்தது பற்றி வருந்தத்தான் செய்வர்.

மொட்டைத் தலை முழங்கால் முடி

முதன்மொழி 1.7-8:5.

சென்னைப் பல்கலைக் கழக அகர முதலி (Lecicon) நச்சுக் குறும்புத்தனமாக நினைவு அல்லது தன்னுணர்ச்சி என்று மட்டும் பொருள்படும் ஸ்மரண என்னும் வடசொல்லை, சுரணை என்னும் சொற்கு மட்டுமன்றிச் சுணை என்னும் சொற்கும் மூலமாகக் காட்டியுள்ளது. சுணை, சுரணை என்னும் தென் சொற்கள் குத்தற் கருத்தை அடிப்படையாகக் கொண்ட சுள் என்னும் வேரினின்றும் ஸ்மரண என்னும் வடசொல்நினை என்னும் பொருள் படும் ஸ்ம்ரு என்னும் வினை முதனிலையினின்றும் பிறந்துள்ளன என வேறுபாடறிக. இங்ஙனம் மொட்டைத் தலைக்கும் முழங்காற்கும் முடிபோட்டுக் காட்டுவதற்குத் தமிழரின் பேதைமையும் பேடிமையுமே முழுக் கரணியமாகும்.

கலைச்சொல்லாக்குநர்

வேர்ச்: 207.

தமிழறியாத பெருமாளர் கலைச் சொல்லாக்குவது குருடர் வழிகாட்டுவதையும், சொல்லாராய்ச்சி யில்லாதார் ஆக்கும் கலைச்சொல் இளஞ்சிறார் ஓவியத்தையுமே ஒக்கும். தமிழ்ப் பற்றில்லாதவரிடம் கலைச் சொல்லாக்கத்தை ஒப்புவிப்பதோ பெற்ற தாயைப் பற்றலரிடம் ஒப்பிப்பதேயன்றி வேறன்று.

கலைச் சொல்லாக்க நெறிமுறைகள். செ. செ. 19: 234

கலைச்சொற் கோட்பாடு

கலைச்சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டு தனித்தமிழில் நூல்கள் ஆக்கவேண்டுமேயல்லாது, வழக்கத்திலுள்ள பொதுவான தமிழ்ச் சொற்களையும் கைவிட்டுப் பிறமொழிச் சொற்களைக் கூட்டியும் கொச்சைச் சொற்களைப் புகுத்தியும் இலக்கணப் பிழையுறவும் எழுதுதல் கூடாது என்பது ஒரு கன்னி சிலரொடு