உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

365

மட்டும்சிலமணி நேரம் கூடி விளையாடிவிட்டு ஏனைப் பொழுதெல்லாம் தன் கற்பைக் கண்டிப்பாய்க்காத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது போலிருக்கிறது.

புதுமணிப் பவழப் புன்மையும் புரைமையும் செ. செ. 52: 585 தெரிவியல், பிரிவியல்

ஒவ்வொரு கலைக்கும், அறிவியற்கும் தெரிவியல் (Theory) புரிவியல் (Practical) என ரு கூறுகள் உள. தெரிவியலை விரிவாகக் கற்பிக்கும்போது புரிவியலைக் காட்டுவதும், புரிவியலை விளக்கமாகக் காட்டுமிடத்துத் தெரிவியலைக் கற்பிப்பதும் வழக்கமன்று. அதற்குக் காலமும் இடந்தராது. நீர்மின்னோ அனல் மின்னோ உருவாக்கப்படுவது எங்ஙனம் என்றறிவது தெரிவியல்; மின்வலியால் விளக்கெரியச் செய்வதும் விசிறியாட வைப்பதும் புரிவியல். மின் விளக்கைக் காணும் பொதுமக்கள் மின்னாக்கமுறை அதனால் அறிவிக்கப்படா மையால் அது அறிவியலின் பாற்பட்ட தன்று என்று பழித்துப் புறக்கணியார். வேர்ச். 202.

மக்களும் சொற்களும்

மக்களைப் போன்றே சொற்களும் குடும்பம் குடும்பமாகவும் குலம் குலமாகவும் இனம் இனமாகவும் கொடி வழி (Geneological) முறையில் இயங்குகின்றன. வேர்ச்.முக.10.