உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

367

முடியுமாதலாலும் அதற்கு இருதலை மணியன் என்று பெயர். பகை நட்பு ஆகிய ஈரிடத்தும் சென்று இருசாரார்க்கும் நல்லவனாக நடிப்பவன் இருதலை மணியனை ஒத்திருத்தலால் அவனையும் அப் பெயரால் அழைப்பர்.

உயிரெழுத்து

சொ.ஆ.க.12

உயிர்

(உயிர் எழுத்துக்கள் உயிர் போன்றமையின் எனப்பட்டன. உயிரானது தானே அசையும், ஓர் உடம்பையும் அசைவிக்கும். அதுபோல உயிரெழுத்துத் தானே ஒலிக்கும்; ஒரு மெய்யெழுத்தையும் ஒலிப்பிக்கும்.

ஊட்டி

2

சங்கினால் குழந்தைகட்குப் பால் ஊட்டுவதால் அதற்கு ஊட்டி என்று பெயர். மக்களின் கழுத்தின் முன்புறத்துள்ள சங்குபோன்ற புடைப்பும் ஊட்டி எனப்படும்; சங்கு எனவும்படும். சொ. ஆ. க. 13

ஒழுகுதல்

வாழ்க்கை ஓரூரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செல்லும் வழிப் போக்குப் போன்றது. நிலத்தின்மேல் காலால் நடந்து செல்வதுபோல வாழ்க்கையில் ஒருவன் நினைவு சொல் செயல் ஆகிய முக்கரணத் தொழிலால் நடக்கின்றான். இதனால் முக்கரணவொழுக்கத்திற்கு நடத்தை அல்லது நடக்கை என்று பெயர். ஒழுக்கம் என்ற சொல்லும் இக்காரணம் பற்றியதே. ஒழுகுதல், நடத்தல். சொ. ஆ.க.10.

கட்டாயம்

ஒன்றைக் கண்டிப்பாய்ச் செய்து தீரவேண்டுவதைக் கட்டாயம் என்பர். கட்ட வேண்டிய ஆயம் கட்டாயம். கட்டுதல், செலுத்துதல்; ஆயம் -வரி, வரிகட்டுவது பொதுவாக மக்கள் விரும்பாததும் தவறாது செய்ய வேண்டுவதுமான காரியம். வரிகட்டுவது போன்ற கண்டிப்பு;கட்டாயம். சொ. ஆ. க. 15.