உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

கரையேறுதல்

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

இவ்வுலக வாழ்க்கை, ஓர் ஆற்றை அல்லது கடலைப் போன்றது. இவ்வுலக இன்பமாகிய சிற்றின்பத்திற் பற்றுவைத்து வாழ்வது அந் நீர்நிலையில் மூழ்கி இறப்பதையும், பற்றற்று வாழ்வது அதை நீந்திக் கரையேறியுய்வதையும் நிகர்க்கும். இதனால் உலகப் பற்றொழித்துப் பேரின்ப வீட்டையடைதற்குக் கரையேறுதல் என்றும் வீட்டுலக வாசிகளுக்கு அக்கரையர் என்றும் பெயர். சொ. ஆ.க. 5.

கிளை - கிளைஞர்

பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு குடியை ஒரு மரமாகக் கொள்ளின் அக்குடும்பங்கள் அதன் கிளைகளைப் போன்றிருத் தலால் இனத்திற்குக் கிளையென்றும். இனத்தார்க்குக் கிளைஞர் என்றும் பெயர். சொ. ஆ.க.3.

குருகு

குருகு என்பது நாரை கொக்கு முதலிய நீர்ப் பறவைப் பொதுப்பெயர். கொல்லன் உலைத் துருத்தி, கொக்கும், நாரையும் போன்ற வடிவாயிருப்பதால் அதனையும் குருகு என்பது செய்யுள் வழக்கு. சொ. ஆ.க.13.

கொடி

புல் பூண்டு செடி கொடி மரம் என்னும் ஐவகை நிலைத்திணை (தாவர) உயிர்களுள், பெரும்பாலும் மெல்லியதும் விரைந்து வளர்வதும் ஒரு கொள்கொம்பைப் பற்றிப் படர்வதும் கொடியே. பெண்ணைக் கொடியென்று சொன்ன அளவிலேயே, அவள் ஆடவனிலும் மெல்லியள் என்றும், அவனிலும் விரைந்து வளர்பவள் என்றும், ஒரு கொழுநனைத் துணைக்கொண்டே வாழ்வள் என்றும் மூன்று பெண்பாற் குணங்கள் குறிப்பாய் அறியக் கிடக்கின்றன. சொ. ஆ.க.2

கொண்டாடுதல்

கொண்டாடுதல் என்பது, ஒரு பொருளைக் கையிற் பற்றி அல்லது தலைமேற் கொண்டு கூத்தாடுதல், தந்தை தன் குழந்தையையும், பத்தன் தான் வழிபடும் கடவுள் உருவையும்