உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

இலவம்பஞ்சும் ஆடிக்காற்றில் அங்கும் இங்கும் பறந்து திரிவதை ஒக்கும். இதனால், ஆலாய்ப் பறத்தல், பஞ்சாய்ப் பறத்தல் என்னும் வழக்குகள் எழுந்தன. எளிமையைக் குறிக்கும் பஞ்சை என்னும் சொல்லும் வற்கடத்தைக் குறிக்கும் பஞ்சம் என்னும் சொல்லும் பஞ்சாய்ப் பறத்தல் என்னும் வழக்கினின் றெழுந்தவையாம்.

பிறப்பும் இறப்பும்

சொ. ஆ. க.8.

மக்கள் பிறப்பு கண் விழிப்பும், அவரது இறப்பு கண்ணடைப்பும் போன்றது. வாழ்க்கை முழுதும் ஒரு பகல் நடவடிக்கை போன்றதே. பெற்றோர் தம்பிள்ளைகளைத் தம் கண்ணுள்ள போதே கரையேற்ற வேண்டுமென்று சொல்வது வழக்கம். பகல் முடிந்து இரவு வந்த பின் கண்மூடித் தூங்குவது போல வாழ்க்கை முடிந்த போதும் மக்கள் தம் கண்மூடி விழியாத் துயில் கொள்வர். சொ. ஆ.க.9.

போலி

போல வருவது போலி, உலக

வழக்கினுள்ளும்

பட்டுப்போலி, கற்போலி, கதர்ப்போலி முதலியவற்றைக் காண்க. பட்டுப் போல்வது பட்டுப்போலி, ஓரெழுத்துப் போல மற்றோரெழுத்து வருவது எழுத்துப் போலி.

மரம் - முளை

.8.

பெற்றோர் மரம்போல்வராயின், பிள்ளைகள் கிளைகளும் கொழுந்தும் போல்வர். ஒருமரத்தின் அடியில் முளைக்கும் முளையைப் போன்று மகனிருத்தலின் அவனுக்குக் கான்முளை என்றும் பெயர். சொ.ஆ.க.3.

முதல் எழுத்து

முதல், முதன்மை அல்லது காரணம், வாணிகமுதல்போல. உயிரும் மெய்யும் முதலில் உண்டானமையும் பிற எழுத்திற்குக் காரணமானமையும் அறிக.

இ,இ.2.