உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துருத்தி

பாவாணர் உவமைகள்

371

ஆற்றிடைக் குறை, கொல்லன் துருத்திபோல முன் குவிந்தும் பின் விரிந்தும் இருப்பதால் அதையும் துருத்தி என்பர் புலவர்.

நடுவு நிலை

சொ. ஆ.க. 13.

நிறைகோலின் நாவு இருபுறமும் சமனாய் நிற்குமாறு நடுநிற்றல் போல, பகை நட்பு அயல் என்னும் முத்திறத்தும் ஒத்தநிலை நடுநிலை அல்லது நடுவுநிலை எனப்பட்டது.

நூல்

சொ. ஆ.க. 6.

முதலாவது இருவகை நூலையும் (அறிவு நூல் ஆடை நூல்) நோக்கின், அவற்றுக்குப் பொதுவான நுண்மை நீட்சி நேர்மை என்னும் மூவியல்புகள் புலனாகும். பஞ்சினால் நெயவு நூலிழைப்பது போலச் சொல்லால் அறிவு நூலிழைத்தல் அல்லது சிலந்தி பட்டுப்பூச்சி முதலியவற்றின் உடம்பினின்று வெளிவரும் நெயவு நூலைப் போலப் புலவனின் உள்ளத்தினின்று அறிவு நூல்வெளிப்படுதல் மற்றுமொரு பொதுத் தன்மையாம். இரண்டாவது இருவகைப் பாவையும் நோக்கின் அவற்றிற்குப் பொதுவான நீட்சி, பரப்பு, இசைப்பு ஆகிய மூவியல்புகள் புலனாகும். சொ.ஆ.க.8.

நொண்டிச் சிந்து

இசைத் தமிழ்ப் பாட்டு வகைகளுள் ஒன்று, அடிக்குறுமை பற்றிச் சிந்து எனப்பெயர் பெறும். அச் சிந்து வகைகளுள் ஒன்று, நெடியதும், குறியதுமாக ஈரடி கொண்டுள்ளமையாலும் நொண்டி நொண்டிச் செல்வதுபோன்ற ஓசையுடைமையாலும் நொண்டிச் சிந்து எனப்படும். சொ. ஆ.க.10.

பஞ்சாய்ப் பறத்தல்

வறுமையால் வருந்தும் மாந்தர் நொய்ய வுடம்புடன் வள்ளலாரை நாடி அங்குமிங்கும் அலைந்து திரிதல். ஆலிலையும்