உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

சோ காத்தல்

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

சோ காத்தல், சிறையிற் காத்திருத்தல், அதுகனக விசயர் என்னும் ஆரிய மன்னர் தமிழ் வேந்தரைப் பழித்ததினால் சேரன் செங்குட்டுவனின் சீற்றத்திற்காளாகிச் சிறைப்பட்டது போல்வது.

தன்மை

திருக்.மர.127

தீயைப்போல் தீங்கு செய்யும் தன்மை தீமை என்றும், நீரைப்போல் நன்மை செய்யும் தன்மை நீர்மை என்றும், புல்லைப்போல் இழிந்தநிலை புன்மை என்றும், சொல்லப்படும். முதலாவது இனிய தன்மையைக் குறிக்க எழுந்த நீர்மை என்னும் சொல் இன்று தன்மை என்னும் பொதுப் பொருளையே குறிக்கின்றது. சொ. ஆ.க.6

தாராளம்

படைஞர் போரில் ஒருகால் தம் உயிரிழக்குமாறு பகைவரைக் கொல்லுந் தொழிலை அல்லது வெல்லும் தொழிலை மேற்கொண்டிருப்பதனாலும் அவர்களின் நாட்டுத் தொண்டும் நிலையாமைச் சிறப்பும் நோக்கி அவர்கட்குக் கொடுக்கப் பட்டிருக்கும் உரிமை அல்லது ஒழுக்கவிதித் தளர்ச்சியினாலும் அவர்கள் பிறர் பொருளை விரும்பிய விடத்து அவரைக் கேளாமலே எடுத்துக் கொள்வது வழக்கம். இதற்குத் தாராளம் என்று பெயர். தார் என்பது சேனை. ஆளம் என்பது ஆளின் தன்மை. தாராள், படைஞன். தாராளம் ஒருவரைக் கேளாமலே அவர் பொருளை எடுத்துக்கொள்ளும் படைஞன் இயல்பு. ஒருவர்க்குரிய இடத்தில் அவரைக் கேளாமற் புகுவதும் தாராளம் எனப்படும். பொருளை வௌவுவதும் உரிமையை வௌவுவதும் ஒன்றே. சொ. ஆ.க. 112. திண்டாடுதல்

சிற்றூர்களிலும் பேரூர்களிலும் உள்ள சந்தி சதுக்கங் களிலும் அம்பலங்களிலும் திண்டுகள் இருப்பதுண்டு. திண்டு, சிறுதிண்ணை. அத்திண்டுகளில் குறச் சிறுமியர் சோற்றுக்குக் கூத்தாடுவது வழக்கம். அவரைப்போல ஒருவன் சோறில்லாது இடர்ப்படும்போது அவன் சோற்றுக்குத் திண்டாடுகிறான்

என்பர்.

சொ. ஆ. க. 11.