உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றின் ஒன்று சிறந்தன

8. நூல்

முதனூலாசிரியர் மெய்ப்பொருள் அறிஞராய் இருந்த தனால், மொழிநடை எதுவாயினும் பொருளே அதன் உள்ளீடென்றும், தனிச் சொற்கும் பொருள் உண்டென்றும் கண்டு, அதனையே சொல்லிற் கடுத்துக் கூறியதோடு அதற்கே சிறப்புக் கொடுத்துச் செய்யுளை அதனுள் அடக்கி, மூன்றாம் அதிகாரத்தைப் பொருளதிகாரமெனப் பெயரிட்டு இயற்றமிழ் இலக்கண நூலின் முடிமணியாக்கினார். திருக் கோவிலின் முகமண்டபமும், இடைமண்டபமும், உண்ணாழிகையும் போல எழுத்தும் சொல்லும் பொருளும் முறையே ஒன்றின் ஒன்று சிறந்தனவாகும்.

தூய்மணிச் சேய்கள்

த.வ.114.

தொல்காப்பியத்திற் சொல்லப்பட்ட எழுவகை நிலத்திற் கும் எண்வகை வனப்பிற்கும் இலக்கியமாயிருந்து இறந்துபட்ட ஏராளமான இருவகைத் தொடர்நிலைச் செய்யுட்களே ஆரிய வருகைக்கு முற்பட்டுச் சொல்லிலும் யாப்பிலும் பொருளிலும் கருத்திலும் முழுத் தூய்மையான மணிச் சேய்களாகும்.

வ.மொ.நூ.வ. 117.

பொருளிலக்கணம்

செய்யுள் சிறந்த கலமாகவும் அதன் பொருள் சிறந்த அமுதாகவும் கருதப்பெற்றதினால் வேறெம்மொழியிலுமில்லாத பொருளிலக்கணம் தமிழிலக்கணத்தின் கொடுமுடியும் முடி மணியும் முதிர்விளைவும் உயிர்நாடியும் தமிழனின் தனிப்பெரும் பெருமையும் ஆகக் கொள்ளப்பெற்றது.

த.வ.24.