உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

375

மரபியல்

மரபியலாவது பாட்டனும் தந்தையும் மகனும் பேரனும் போல, அல்லது அடியும்கவையும் கொம்பும் கிளையும் போல ஒன்றினொன்று பிறந்தும் கிளைத்தும் வரும் தொடர்ச்சி பற்றியது. உலகமொழிகளின் தொடர்பு செ. செ. 23:166.

மரபு

வித்தும் வேரும் அடியும் கிளையும் குச்சும் கொழுந்து மாகத் தொடர்ந் தோங்கும் மரம் போல மேன்மேல் தொடர்ந்து செல்லும் குலத் தொடர்ச்சி மரபு எனப்பட்டது. தொடர்ந்து வரும் பழக்க வழக்கங்களையும் சொல் வழக்காற்றையும் மரபு என்பதுமுண்டு. தொல்காப்பியத்திலுள்ள மரபியல் என்னும் இயற்பெயர் இப்பொருள் பற்றியதே. சொ.ஆ.க.3.

கொடிவழி

பலதலைமுறையாக; தொடர்ந்து வரும் குலத் தொடர்ச்சி கொடியும் மரமும்போல நீண்டும் தொடர்ந்தும் இருத்தலின், அதனைக் கொடி என்றும் கொடிவழி என்றும் மரபு என்றும் கூறுவது வழக்கம். சொ.ஆ.க.3.

அகங்கையும் புறங்கையும்

(காதல் மறம்) ஆகிய இரு குணங்களுள்ளும் அல்லது ணவாழ்க்கையுள்ளும் உள்ளத்திற்கு மிக நெருங்கியது காதலே. ஆதலால் அதை அகம் என்றார். அகமல்லாதது புறமாதலின் மறத்தைப் புறம் என்றார். அவை அகப்பகையும் புறப்பகையும் போலப் பிரிந்து நில்லாது அகங்கையும் புறங்கையும் போல் ஒன்றியே நிற்கும்.

நிறைமொழி மாந்தர் மறைமொழி

காளமேகம்

த.வ.115.

திருமலைராயன்பட்டினத்தில்மண்மாரி

பெய்வித்தது, நிறைமொழி மாந்தர் மறைமொழி போன்றதாம்.

திருக். மர. 872.