உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

மூலநோயாளர்

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

'பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே, அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்” என்று தொல்காப்பியம் கூறுவதால், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பேகூர்ங் கண்ணும் எஃகுச் செவியும் நுண்மாண் நுழைபுலமும் கொண்ட குமரி நாட்டுத் தமிழ்மக்கட்கும் உரை வேண்டியிருந்தது என்பது புலனாகும்.ஆதலால் உரைத் துணையின்றி மூலத்தையே படிப்பவர், மூலநோயாளிகள் என்னுமளவு பலவிடத்தும் பொருளுணராது இடர்ப்படுவர் என்பது தேற்றம். Og. OLDIT. 79 : 14.

குற்றியலுகரம் எண்ணப்பெறுதலும் பெறாமையும்

சிறுவர் சிலவகையிற் கணக்கிற் சேர்க்கப்பெற்றும் சிலவகையில் சேர்க்கப்பெறாதும் போவதுபோல், குற்றியலு கரமும் சீர்நிலைக்கும் தளவகைக்கு எழுத்தெண்ணப் பெற்றும், ஐவகையடிகளின், பதினேழ் நிலைவகைக்கு எழுத்தெண்ணப் பெறாதும் தொன்றுதொட்டு இயங்கி வந்திருக்கிறது.

Q. QALDI. 3. 12:12

பொற்கலத்து அறுசுவையுண்டி

இருமைக்கும் உதவும் விழுமிய பொருளை அணிமிக்க குறள்வெண்பாவாற் பாடியிருப்பது பன்மணி பதித்த ஓவிய வேலைப்பாட்டுப் பொற்கலத்தில் அரசர்க்குரிய அறுசுவை யுண்டியைப் படைத்தாற் போலும். திருக்.மர.முன். 18.

திருக்குறள் சுரங்கம்

இதுவரை பகுதிக்கும் முழுமைக்கும் சுருக்கமாகவும் பெருக்கமாகவும் திருக்குறட்குத் தோன்றியுள்ள உரைகள் ஏறத்தாழ நூறும் அது மொழிபெயர்க்கப் பெற்ற மொழிகள் ருபதும் ஆகும். ஆயினும், இன்னும் அச் சுரங்கத்தினின்று கருத்து மணிகள் தோண்டத் தோண்ட மென்மேலும் வந்து கொண்டே யிருக்கின்றன. திருக். மர. முன். 24.