உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

377

ஏமப்புணை

ஏமப்புணையாவது நடுக்கடலிற் கப்பல் மூழ்கும் போது கலவர் ஏறித் தப்பும் ஏமப்படகு (Life Boat). வாழ்க்கைக் கடலைக் கடக்கும் இல்லறத்தார்க்கு இடுக்கட் காலத்தில் உதவிக் காக்கும் னத்தார் ஏமப்புணையார். பிறவிக் கடலைக் கடக்கும் துறவு பயில்வார்க்குத் தவ வோகங்களில் தவறு நேர்ந்து அவர்கெடும் நிலையில் அவரைத் திருத்தி ஆற்றுப் படுத்தும் முழுத் துறவியர் ஏமப்புணையார். திருக். 306

ஆதிபகவன் ஆதிசங்கரர்

முதன் முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல்பிற் காலத்திற் பெருந்தேவர்க்கும் சிறு தெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத் தன் முதற் பொருள் குன்றியமையால் அதை நிறைவுபடுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. இதை ஆதிசங்கராச் சாரியார் என்பது போலக்கொள்க. முதற் சங்கராச்சாரியார் ஆதி என்னும் புலைச்சியை மணந்தவரல்லர். திருக்.மர. முன். 11

ஆதிபகவன் என்பதிலுள்ள ஆதியைப் புலைச்சியாகவும் பகவனைப் பிராமணனாகவும் காட்டும் கட்டுக் கதை மறுப்பு இஃது.

தழை - தண்டு - தாள்

தமிழக மருந்துகள் பெரும்பாலும் தழையுந் தண்டு மாயிருத்தலின் பிறவிப் பிணிக்கு மருந்தாகும் குறிப்புப் பட இறைவன் திருவடிகளை நற்றாள் என்றார். திருக். மர. 2 பண்பு, பயன்

இல்லற வாழ்க்கை இருபகட்டு ஒருசகட்டு ஒழுக்கம் போல்வதாகலின், கணவன்மனைவியரிடைப் பட்ட இருதலையன்பு அதன் பண்பாயிற்று. அதனாற் செய்யப்படும் அறம் அதன் பயனாயிற்று. திருக். மர. 45