உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

திருக்குறள் அழியாமை

பரிமேலழகர் உரையால் ஒரு பெரு நன்மையும் இல்லையோவெனின் உண்டு. அது எதுவெனின் அவருரைத் தொடர்பால் திருக்குறள் இதுவரை அழிக்கப்படா திருந்ததே யென்க. எதுபோலவெனின், முதலிருகழகத்தும் வழங்கிய இயற்றமிழிலக்கணம் முழுதும் அதன் தொகுப்பாசிரியராகிய தொல்காப்பியரது தொல்காப்பியம் என்னும் பிண்ட நூலான் போற்றப்பட்டிருப்பது போன்று என்க. திருக்.மர. முக. 8

அறுசுவையுண்டியில் ஆரிய நச்சு

(பரிமேலழகர் உரை) பெரும்பாலும் ஏனையுரைகள் எல்லாவற்றினும் சிறந்த தென்பதும், சிலகுறள்கட்கு ஏனை யுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும் உண்மையே. ஆயின் பெறுதற்கரிய அறுசுவையரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப உண்மைக்கு மாறானதும் தமிழுக்கும் தமிழர்க்குங்கேடு பயப்பதுமான ஆரிய நச்சுக் கருத்துக்களை முதலும் இடையும் முடிவுமாக நெடுகலும் குறிக்கோளாகக் கொண்டு புகுத்தி யிருப்பது இவ்வுரையை நடுநிலையுடன் நோக்கும் எவர்க்கும் புலனாகாமற் போகாது.

பாட்டிக்கு நூற்கப் பேர்த்தி கற்பித்தல்

திருக்.மர. முக.5.

அறியாமை அகப்பற்று அவா ஆசை சினம் என வடநூலார் கூறும் குற்றம் ஐந்தனுள் அகப்பற்றை அறியாமைக் கண்ணும் அவாவை ஆசைக்கண்ணும் திருவள்ளுவர் அடக்கிக் காமவெகுளி மயக்கம் என மூன்றாகக் கூறியதாகப் பரிமேலழகர் உரைப்பர். இது பாட்டிக்கு நூல்நூற்கப் பேர்த்தி கற்றுக் கொடுத்தாள் என்பது போன்றதே. வேள்வி ஒன்றே இயற்றும் ஆரியர் ஓகமுறை கற்றது தமிழரிடத்திலேயே ஆதலின் தமிழ் நூலார் கூறும் முக்குற்றங்களையுமே வடநூலார் ஐந்தாக விரித்தார் என அறிக.

திருக். மர. 360