உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பாடமாக எடுத்துப் படித்தேன். அன்று, ஆங்கிலப் பற்றாளனாகவும் பேச்சாளனாகவும் மாணவர் (ஆங்கில) இலக்கியமன்றச் செயலாளனாகவும் இருந்ததனால் ஆங்கில இலக்கியத்தைக் கரைகாணவும் ஆக்கசுப்போர்டு (Oxford) என்னும் எருதந்துறையிற் பணிகொள்ளவும் விரும்மபினேன் (என் தமிழ்த் தொண்டு இயன்றது எங்ஙனம்? (செந்.செல்., 44 : 217) என்பது அது.

தேவநேசனின் கல்வி விருப்பம், அவர் விரும்பியவாறே நிறைவேறி வந்தது; காலமெல்லாமும் நிறைவேறியே வந்தது; அஃது அவர் கடைப்பிடி. ஆனால், பணிவிருப்பம் அவரைக் கொண்டு மட்டும் நிறைவேறுவ தன்றே! அவ்விடரும் தொடக்கத்தில் மட்டும் இன்றிக் காலமெல்லாமும் இருந்தே வந்தது!

'யங்' துரைமகனாரிடம் கடன் பெற்றுக் கொண்டு தானே பாளையங்கோட்டையில் மேல் வகுப்புக் கல்வி பெற்றார். அத்துரைமகனார் பொறுப்பில் சீயோன் மலையில் ஓர் உயர்தரப்பள்ளி நடைபெற்று வருதலை அறிந்தோம் அல்லமோ! அப்பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு ஆசிரியராக அமர்ந்தார் தேவநேசன்! ஏன்? தாம் யங்துரைமகனாரிடம் பட்ட கடனைப் பணிக்கொடையால் தீர்ப்பதற்காக! அவர் முதற்கண் பண்யாற்றிய நிறுவனம் அச்சீயோன்மலைப் பள்ளியேயாம்.

தேவநேசன் பிறப்பு, வளர்ப்பு, படிப்புப்பற்றிய சுருங்கிய செய்திகள் இவை. இவர் பிறந்த ஊர் பெரும்புத்தூர் என்றும், புறக்கடையான்பட்டி என்றும், சங்கரன் கோயில் என்றும் பிறிதொன்றென்றும், பலவாறாக எழுதினாரும் கூறினாரும் உளர். சங்கரன் கோயிலைச் சார்ந்த ஊர் பெரும்புத்தூர்; நான்கு அயிரம் (கி.மீ.) வடபால் உள்ளது. அதற்கு நான்கு அயிரம்வடமேற்கிலே உள்ளது புறக்கடையான்பட்டி. அவ்வூர்களில் உறவினர்கள் இருந்துளர்.அவ்வுறவு கருதியே பாவாணரை அவ்வூரினரெனக் கொண்டுள்ளன என அறியலாம். அவர் எழுத்திலேயே ஒன்றற்குப் பல இடங்களில் தாம் பிறந்த இடம் சங்கரன் கோயில் என்று இருப்பதால் மற்றை இடங்களை எண்ண வேண்டுவதில்லை!

ஞானமுத்தனார் இளமையிலேயே பெற்றோரை இழந்து திக்கற்றவரானார். அவர்க்குப் புகலிடமாகத் தோக்கசு பெருமகனார் இருந்து ஆளாக்கினார். ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் சான்றோரும் உண்டு கொல்? என்று கண்ணகியார் வினாவிய வினாவுக்கு விடைபோலத் தோக்கசு, சான்றாண்மைக் கடனாற்றி யுள்ளார்.படிப்பித்தும் மணப்பித்தும் வேலையளிப்பித்தும்