உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

அவ்வுந்துதல் என்ன ஆயிற்று? ஒரு சொல் தானும் ஆங்கிலந்த விர்த்துப் பேசாத கடுநோன்பாயிற்று, அந்நாள் கடுநோன்பு பின்னேஎன்ன ஆயிற்று? எம் மொழிச் சொல்லாயினும் ஒன்றுதானும் கலந்து பேசாத தமிழ் நோன்பை உண்டாக்கிய சூழல் - நிலை என்ன? பிறவிநோக்கு என்று பேசுகிறாரே! அந்நோக்கு நிறைவேற வேண்டாவா?

தேவேநேசன் கற்ற தொடக்கநாள் கல்வியை இப்பகுதியில் கண்டோம். ஓதுவது ஒழியா மூதறிவராகத் திகழ்ந்த அவர்தம் புலவரை இறந்த புகழ்க்கல்வி, பள்ளிச் சுவர்களுக்கு ஊடேமட்டும் உண்டாயதோ? பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், எத்துணை நூல்களைக் கற்றார்! எத்துணை துறைகளில் ஆழ்ந்தார்! எத்துணை மொழிகளைக் கற்றுக் கற்றுக் கலைமாடங்களை எழுப்புதற்குச் சூள் கொண்டார்! அத்தனிப்பெருங் கல்வியை, இப்பள்ளிக்கல்வி அளவில் சுட்டி முடிக்க இயலுமோ நூற்றில் ஒரு விழுக்காடே என்னும் பள்ளிக் கல்வி இவ்வளவில்நிற்க, அவர்தம் பணித்திறம் தொடர்வோம்.