உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.பலநிலைப் பணிகள்

க. அரும்பு

சீயோன்மலை எனப்படும் முறம்பில் தேவநேசன் தம் ஆசிரியப்பணியைத் தொடங்கினார். சீயோன் மலையில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தாம் முதற்படிவ ஆசிரியராக அமர்ந்து ஈராண்டு பணியாற்றியமையைக் குறித்துள்ளார். அதன்பின், 1921 இல், தாம் பயின்ற ஆம்பூர்பள்ளியிலேயே ஆசிரியப்பணிமேற் கொண்டதைக் குறிப்பிடுகிறார். ஆதலால், 1919 ஆம் கல்வியாண்டு முதல் 1921 ஆம்கல்வியாண்டு வரை சீயோன் மலையில் தேவநேசர் பணியாற்றினார் என்பது தெளிவாகும். ஆறாம்அகவையில் பள்ளியில் சேர்ந்து பதினோராண்டுகள் (1-XI) பயின்று, தம் 17 ஆம் அகவையில் ஆசிரியப் பணியில் புகுந்தார் என்க.

சீயோன் மலையில் பணியாற்றிய காலத்தில் ஆங்கு நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றனைத் தாம் 1972 ஆம் ஆண்டில் வெளியிட்ட தமிழர் வரலாற்றில் வரைந்துள்ளார். அவர் தம் நினைவாற்றலைச் சுட்டுவதுடன் 'யங்' துரையின் கண்ணோட்டத்தையும் விளக்கு வதாக உள்ளது அது.

"இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் முகவை மாவட்டத் திருவில்லிபுத்தூர் வட்டத்தென் எல்லையில் உள்ள சீயோன் மலை என்னும் திருக்குறிப்புத் திருச்சவை (Baptist) நிலையத்தில், மேனாடு துரை இருந்த காலத்தில், அருள்புத் தூரிலிருந்து வந்த தேவதாசன் என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தகிறித்தவ ஆசிரியர், கல்பட்டியில் பிராமதண ஊராளி (கிராமமுனிசீபு) இருந்த தெருவழியாக வந்தார் என்று,. அவரேவலால் அடிக்கப்பட்டார். அதை அவர் மேனாடு துரையிடம் முறையிட்டார். உடனே துரை வண்டிகட்டிக் கொண்டு கல்பட்டி சென்று ஊராளியில்லத்