உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

தையடைந்தார். அவர் வருகையறிந்து, ஊராளியார் வீட்டிற்குள் சென்று தலைவாயிற் கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொண்டார். துரை கதவைத் தட்டிவிட்டுத் தெருத்திண்ணையில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து, ஊராளியின் மனைவியார் கதவைத்திறந்து ஊராளியார்ஊரில் இல்லை என்று சொல்லி விட்டார். துரை நடந்ததைச் சொல்லி ஒரு கிழமைக்குள் ஊராளியார் தம்மிடம் வந்து மன்னிப்புக் கேளாவிடின் அவர்வேலைபோய்விடும்என்று சொல்லி விட்டுத் திரும்பி விட்டார். ஏழாம்நாள், ஊராளியார் தேவதாசன் ஆசிரியரை அழைத்துக் கொண்டு துரையிடம் வந்து மன்னிப்பு கேட்டுச் சென்றார். குலவேற்றுமைக் கொடுமை யினின்று தப்பவே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பலர் முகமதி யராயினர் என்று செய்தியையுரைத்து, அதன் விளைவையும் சுட்டுகிறார் (பக். 325 6)! இக்குறிப்பை அன்றே தமிழர் உணர்ந்திருந்தால், எத்துணை நலப்பாடாக இருந்திருக்கும்!

சீயோன்மலையை விடுத்துத் தேவநேசர் ஆம்பூர்க்குச் செல்லுங்கால் (1927)அஃது உயர்தரப் பள்ளியாகவே இருந்திருக்கிறது. அங்கே தமிழ் கற்பிக்கும் ஆசிரியராக அமர்த்தப் பட்டிருக்கிறார். ஆம்பூர்ப்பள்ளி 1922 இல் உயர்நிலைப் பள்ளியாக உயரத் தேவநேசரும் உயர்நிலைப்பள்ளி உதவித் தமிழாசிரியராக உயர்த்தப்பட்டிருக்கிறார்.

இவ்வாம்பூரைப் பற்றிப், பின்னாளில் அவர் வரைந்த 'தமிழர் மதம்' என்னும் நூலில் குறிப்பிடுகிறார் நேயர்.

"வடார்க்காடு மாவட்ட ஆம்பூரின் பழம் பெயர் 'ஆன்மையூர்' என்றும் ஆவை வணங்கி வந்ததால் அப்பெயர் பெற்றதென்றும் அங்கிருந்த பெரும் புலவரும் பாவேந்தருமான துரைசாமிப் பாவலர் சொன்னார். இங்ஙனம் சிலவூரிலும் ஆவை வணங்கியிருக்கலாம்" என்பது அது.

ஆம்பூரில் வாழ்ந்த இக்கால நிலையே, தேவநேசனின் வாழ்வின் பெருந்திருப்புமையமாக அமைந்தது எனலாம்.

அந்நாளில், இவர் தமிழ் கற்பிக்கத் தக்கார் என ஒருவர்க்குப் புகழ் வாய்ந்த புலவர் ஒருவர் சான்று வழங்கினால், அதனைக்