உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

33

கொண்டே தமிழாசிரியப் பணியில் அமர்த்தும் வழக்கம் இருந்தது. கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் வட அந்நடை முறையே இருந்தது. ஆதலால், தேவநேசனுக்குப் பண்டிதர் மாசிலாமணி என்பவர் (நண்பர் மாசிலாமணி என்றும் அவரைச் சுட்டுவதால் (11-11-37) இருவர் நெருக்கமும் இனிதின் விளங்கும்!) ஒருதகுதிச் சான்றிதழ் வழங்கினார். அதில் தேவநேசனைத், தேவ நேசக் கவிவாணன் எனக் குறிப்பிட்டிருந்தார். அப் பெயராலேயே ஆசிரியப் பதிவும் பெற்றார். பண்டிதர் மாசிலா மணியார் பாளையங் கோட்டைசி.எம். எசு. பள்ளித் தமிழாசிரியராக இருந்தவர். பாவாணர் தம் பின் வாழ்விலும் தொடர்பாக இருந்தவர் என்பது அறிய வருகின்றது.

சான்றத் தகுதியால் தமிழாசிரியரான கவிவாணர், அப் பதவிக்கும், தலைமைத் தமிழாசிரியர் தகுதிக்கும் அந்நாளில் சிறப்பாக விளங்கிவந்த மதுரைத் தமிழ்ச சங்கப் பண்டிதத்தேர்வு மிகப்பயன்படும் எனக் கருதினார்.

அதனால் அதற்கு 1924 இல் விண்ணப்பித்தார். அத்தேர்வில் முதனிலை இடைநிலை இறுதிநிலை (பிரவேசம், பாலபண்டிதம், பண்டிதம்) என முந்நிலைகள் முறையேஉண்டு.எனினும், ஒருவர் தாம் இறுதிநிலைத்தேர்வு எழுதி வெற்றி பெறலாம் எனக் கருதினால், அத்தேர்வு மட்டுமே எழுதவும் வாய்ப்பு இருந்தது. அவ்வகையில், கவிவாணர் இறுதிநிலைத் தேர்வுக்கு விண்ணப்பித்து அதனையே எழுதினார்.

பண்டிதத்தேர்வுப் பட்டியலில் "ஞா. தேவநேசக் கவிவாணன், மிஷன் உயர்தரப்பாடசாலை, ஆம்பூர், வட ஆற்காடு ஜில்லா" என்றுள்ளது. தேர்வு ஏப்பிரல் 7,8,9 ஆம் நாள்களில் நடை பெற்றுள்ளது. பண்டிதத் தேர்வில் அவ்வாண்டில் கவிவாணன் ஒருவரே வெற்றி பெற்றுள்ளார். அவ்வெற்றியும் இரண்டாம் வகுப்பு. "தொடர் எண்:1; பதிவெண்:4; (செந்தமிழ்த் தொகுதி 22) என்பது அது.பண்டிதத் தேர்வு எளியது அன்று; அத்தேர்வு வினாக்களைக் குறித்த ஒரு குறிப்பைக் கண்டாலே உண்மை விளங்கிவிடும்.

"வெண்பா இயற்று முறை ஒருவன் கற்றுளனோ என்று அறிய வேண்டின்யாதானும் ஒரு விஷயத்தின் பேரில் ஒரு வெண்பாவை இயற்றும்படி கேட்கலாம். மேலும், அவனது திறமையை ஊன்றி ஆராய வேண்டுமாயின் அரிய விஷயமொன்றைத்