உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

தாமாக நியமித்து அதன் பேரால் இன்னபொருமைய ஒரு வெண்பாச் சொல் என்று கேட்பின் போதுமாய் இருக்கும். அங்ஙனஞ் செய்யாமல் திருப்பாற் கடனையும் சேடனையும் சிறப்பித்து ஒரு நேரிசைவெண்பா, 'வெண்டிரை' எனத்தொடங்கி, ‘விழைந்து' என முடிய, ஆடுமாடு என்னுஞ்சொற்கள் மிருகங்களைக் குறிக்காமல் வேறு பொருளில் விரவிவர, ஐந்துசீர் ஈரசைச் சீராகவும் பத்துச் சீர் மூவசைச் சீராகவும் அமைய, ஒற்று விரவாமல் பாடுக எனப்பணிப்பின் ஐயகோ! இளம்மாணவர் என்னதான் செய்குவார்!" எனக்கூறி இரங்குகின்றார். ச. பூபாலர் என்பார் (செந்தமிழ். 18: 343 - 349). இத்தகு தேர்வில் பண்டிதத் தேர்வே தேர்வெனக் கொண்டு, ஒரே முறையில் இரண்டாம் வகுப்பில் ஒரோ ஒருவராகத் தேவநேசக் கவிவாணர் தேர்ந்ததே பெருந்தேர்ச்சி எனற்கு ஐயமுண்டோ?

பண்டிதர்க்கு இலக்கணம் 1, இலக்கணம் 2, இலக்கியம் 1, இலக்கியம் 2, வசனமும் தருக்கமும், செய்யுளியற்றல், வியாசம் என்பவை தேர்வுத்தாள்கள். இவற்றின் வினாக்குறிப்பாளர்கள் எவர்? முறையே, உ.வே. சாமிநாதர், இரா. இராகவர், இரா. சுப்பிரமணியக் கவிராயர், தி.த. கனகசுந்தரர், அ. குமார சாமியார், வெ.ப.சுப்பிரமணியனார், மு. இராகவர் என்பார். கவிவாணர் இத்தேர்வில் பெற்ற வெற்றி என்ன செய்தது? அவரே குறிக்கிறார்:

"1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப்பண்டிதத் தேர்வெழுதித் தேறினேன். அதனால் எழுந்த செருக்கினாலும் தமிழ்வெறியினாலும், ஆங்கிலத்தை அறவே புறக்கணித்து நான் ஆங்கிலம் பேசக்கூடாதென்றும், பிறர் பேசின் செவிமடுக்கக் கூடாதென்றும் சூளிட்டுக் கொண்டேன். அம்மயக்குப் பத்தாண்டு தொடர்ந்தது. அதனால்தமிழாராய்ச்சியில் ஆழ முழுகித்தமிழின் அடிமட்டத்தைக் கண்டேனாயினும், ஆங்கிலப்பேச்சாற்றலை இழந்து விட்டதனால், ஆங்கிலப்பட்டம் பெறும் வரை கல்லூரியுட் கால்வைக்க முடியாது போயிற்று. அதனால் பதவியுயர்வும் பொருளியல் முன்னேற்றமும் இல்லாது போயின"

முழுமையாகத் தமிழுக்குத் தம்மை ஒப்படைத்து விட்டமையால் இத்மிழுலகும் தமிழகக்கல்வி நிலையங்களும், தமிழக அரசும், தமிழ் நாட்டுச் செல்வர்களும்சீராட்டிப்