உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

35

பாராட்டிச் சிறப்பித்து இருப்பாராயின், தேவநேசக் கவிவாணத் தமிழ் வாழ்வுக்கு இப்பட்டறிவு நேர்ந்திராது! நெடுகிலும் மாறாமை, இன்றும் நேரிடைக் காட்சிகள் தாமே!

தம்மனம் தமிழின்பால் அழுந்தியமையையும் தேவநேசன் சட்டுகிறார்.-(ஆறாம்படிவத்தில்) தமிழ் கற்றதனாலும், இசைப் பாட்டும் செய்யுளும் இயற்றி வந்ததனாலும், சைத்தமிழ்ப் பித்தன் ஆனதனாலும், நான் அறியாவாறு இறைவன் என் மனப்பாங்கை மாற்றியதனாலும் "தமிழாசிரியப் பணி தலைமேற் கொண்டேன் என்பது அது (என் தமிழ்த்தொண்டு இயன்றது எங்ஙனம்? செந்.செல்.44:27)

2. முகை

ஆம்பூரில் மூவாண்டுகள் பணியாற்றிய பின்னர் தேவநேசன் நாட்டம் சென்னையைச் சார்கிறது. அவர்தம் ஆய்வுக்கும் ஆர்வத் தொண்டுக்கும் ஆம்பூரினும் சென்னை ஏந்தாகத் தோன்றியிருக்கக் கூடும்.

பிரம்பூர் கலவல் கண்ணனார் உயர்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி கெல்லற்று உயர்நிலைப்பள்ளி, தாம்பரம் கிறித்தவக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் உதவித் தமிழாசிரியராகவும், தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவற்றுள் கலவல கண்ணனார் உயர்நிலைப்பள்ளி வேலை கிடைத்தது "பேராயக் கட்சிப் பெருமகனும் பெயர்பெற்ற அறுவையரும் (Surgeon) பிராமணருமான காலஞ் சென்ற பண்டகர் (Dr.) மல்லையா" வின் பரிந்துரையினால் என்பதைப் பாராட்டுகிறார் (என் அண்ணாமலை நகர் வாழ்க்கை. பக். 17) தேவநேசர். அன்றியும் இம்மல்லையா உற்றிடத்துதவுநராகவும் தேவநேசர்க்கு விளங்கினார் என்பதும் விளங்குகின்றது.

"ஒப்பியன் மொழிநூல் முதன்மடலம். திராவிடம் முதற்பாகம்" 1940 இல் வெளிப்படுத்திய தேவநேசன், அவ்வரிய பெரிய நூலை அம்மல்லையாவிற்குப் படையலாக்கி "எனக்கு உற்றிடத்துதவிய நன்றிக் குறியாகப் படைக்கப்பட்டுள்ளது இப்புத்தகம்" என்று தம்நன்றியைப் பதித்துள்ளமையால், இது நன்கு விளங்கும்.