உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

மற்றைப் பள்ளிகள் கிறித்தவப் பள்ளிகள் ஆதலால் எளிதாகத் தமக்கு வேலை கிடைத்தமையையும் குறிப்பிடுகிறார். பிறபள்ளிகளில் தமக்கு வேலை கிடைத்தற்கு "அக்காலத்தில் என்மொழியாராய்ச்சி அரும்பியிருந்ததே யன்றி மலர்ந்திலது" எனத் தேவநேசனார் சுட்டுவதைக் குறித்து என்னே! என்னே! என்று இரங்க வேண்டியதாகவே உள்ளது! கல்வி நிலையங்கள் கலைமலர்ச்சியை விரும்பித்தவங்கிடக்குமா? கலைத்திறம் அரும்பாமையைக் கொண்டாடி அரவணைக்குமா?

சென்னையில் தேவநேசனார் வாழ்ந்த காலத்தில் திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கத் தனித்தமிழ்ப் புலவர் தேர்வுக்குப் பயின்றார்.பதிவெண் 15. ஞா. தேவநேசப் பாவாணன், தமிழாசியர், கிறித்தவ கலாசாலை, சென்னை" என்னும் முகவரியில் விண்ணப்பித்துள்ளார். 1926 சூன் 28 முதல் சூலை 5 வரை தேர்வுகள் நடைபெற்றுள்ளன. அவ்வாண்டு, தமிழ்ப் புலவருள் தேர்ந்தார் இவர் ஒருவரே; தேர்ச்சி பெற்ற வகுப்பு மூன்றாவது ஆகும் (செந் செல். 4 : 336). தேவநேசக் கவிவாணன் இங்கே தேவநேசப் பாவாணனாகக் கிளர்கின்றார் (கவிவாணன் பாவாணன் ஆனார்; நேசம்இன்னும் நேயமாக வில்லை) இதன் பின்னர்ச் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வும் B.O.L. என்னும் கீழ்கலைத் தேர்வும் எழுதி வெற்றி பெற்றார். தேவநேசர், கெல்லற்று உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டும், கிறித்தவக்கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் மூவாண்டும் பணியாற்றிய பின், மன்னர் குடிப்பின்லேக் கல்லூரி (Finlay) உயர்நிலைப் பள்ளியில் ஆறாண்டு பணிசெய்துள்ார்.

இசைத்தமிழ் ஈடுபாடும், இசைப்பா இயற்றுதலும் கருவி இயக்குதலும் முன்னரே கொண்டிருந்த தேவநேசர்க்கு இக் காலம் பொற்காலமாயிற்று. மன்னர் குடியில் இருந்த இசைப்பெரும் புலவர் இராசகோபாலரிடம் முறையாக இசைபயின்றார். பின்னே நேசமணியம்மையார் நினைவு வெளியீடாக வெளியிட்ட

சைத்தமிழ்க் கலம்பகம் என்னும் நூலில், இசை சையாசிரிய வணக்கம் பாடி இசைத்துள்ளார். மேலும் இசைத்தமிழ் தொடர்பாகப் பின்னாளில் எழுந்த மறுப்புக் கட்டுரை ஒன்றில் (செந்.செல். 20:465)

"சென்ற பன்னீராண்டுகளாக என்னால் இயன்ற வரை இசைத்தமிழையும் ஆய்ந்து வருகிறேன் என்பதையும், நால்வகை